தேர்தல் வெற்றிக்கு பின், முதல்வர்குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு முடிவெடுக்கும் என பா.ஜ., தமிழகபொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பா.ஜ., நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

தமிழகத்தில் தேர்தல்வெற்றிக்கு பின், முதல்வர் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்யும். சட்டசபைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே தொகுதிப்பங்கீடு இறுதிசெய்யப்படும். அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் பா.ஜ., தோழமையுடனும் வெளிப்படையாகவும் செயல்பட்டு வருகிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப பா.ஜ.,வின் பார்லிகுழு கூட்டம் கூடி தேவையான முடிவுகளை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராம கிருஷ்ணன் மற்றும் மறைந்த சினிமாபட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மகன் சுப்புபஞ்சு ஆகியோர் பா.ஜ.,வில் இணைந்தனர்

Comments are closed.