தைப்பூசத்திருநாளை தமிழகஅரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று கோவையில் நடைபெற்ற வேல்யாத்திரை பொதுக் கூட்டத்தில் பா.ஜ.,மாநிலத் தலைவர் முருகன் வலியுறுத்தினார்.

கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தில், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பேசியதாவது: வெற்றிவேல் வீரவேல் என்று தமிழில் உரையை துவங்கினார். தமிழ்கடவுள் முருகனையும், கந்தசஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசிய கருப்பர் கூட்டத்தை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது.

கருப்பர் கூட்டத்துக்கு பின்னணியில் இருப்பது திமுக., என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திமுக.வின் இந்துவிரோத போக்கிற்கு எதிராக பாஜக ., தொண்டர்கள் பொங்கி எழுந்துள்ளனர். தமிழகமக்கள் பா.ஜ.,அரியணையில் ஏறுவதற்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
தமிழகத்தை தாண்டி, கர்நாடகா, தெலுங்கான, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தமிழக பா.ஜ.,நடத்திவரும் வேல் யாத்திரை குறித்து ஒவ்வொரு நாளும் பேசப்பட்டுவருகிறது. இவ்வாறு துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பேசினார்.

பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேசியதாவது:, வேல்யாத்திரையை துவங்கியதிலிருந்து தி.மு.க.,தலைவர் ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது. அதற்கேற்ப வேல் யாத்திரை அமைதியாக நடந்துவருகிறது. கடலூர், திருவண்ணாமலையில் மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது..கொரோனா வைரஸிற்கு பயந்து திமுக., தலைவர் ஸ்டாலின் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால் பா.ஜ.,வினர் கொரோனா ஊரடங்குகாலத்திலும் வெளியே வந்து ஏழை எளியவர்களுக்கு உணவுசமைத்து வழங்கினோம்.

கபசுரகுடிநீர், மாஸ்க், உடலுக்கு எதிர்ப்புச்சத்து வரவழைக்கும் மருந்துகளையும் பொருட்களையும் வழங்கினோம்.கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ்கடவுள் முருகனையும் இழிவுபடுத்தியவர்களுக்கு தக்கபாடம் புகட்டப்படும். ஊழல் என்பது திமுக.,வுடன் பிறந்தது. ஊழலையும் திமுக.,வையும் பிரிக்கமுடியாது. தி.மு.க.,ஆட்சியைப் பிடிக்கும் கனவு கனவாகவே இருக்கும்.மற்ற மத பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடப்படுவதுபோல தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் தைப்பூச விழாவுக்கு, தமிழகஅரசு விடுமுறை அளிக்கவேண்டும். இவ்வாறு முருகன் பேசினார்.

Comments are closed.