இன்னும்14 நாட்களுக்குள் விக்ரம்லேண்டரில் இருந்து ஆர்பிட்டருக்கு சிக்னல் கிடைக்கும், இதற்கான வாய்ப்புகள் எப்படி, பார்க்கலாம்.

தொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்…

நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தஇஸ்ரோ சேர்மன் டாக்டர் சிவன் இந்தநேரத்தில் பிரதமர் மோடியின் ஆறுதலும், ஆதரவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. அவருடைய ஆதரவினால் நிச்சயமாக நிலவில் இறங்கி சந்திராயன்-2 ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
.
அதுமட்டுமல்லாது இன்னும்14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டரில் இருந்து ஆர்பிட்டருக்கு சிக்னல்கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சிவன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் . வாழ்த்துக்கள் சிவன் சார்

இதற்கான வாய்ப்புகள் எப்படி உருவாகலாம் என்றால், சந்திரனில் இரவுபகல் மாற்றம்
ஏற்படும் பொழுது சந்திரனுக்கு மிக அருகே 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் விக்ரம் லேண்டரில் இருந்து விக்ரம் லேண்டரை கழற்றி விட்டு 140 கிலோமீட்டர் தொலைவில் சந்திரனை சுற்றிக் கொண்டு ஆர்பிட்டர் என்கிற தாய்கலத்திற்கு தகவல் கிடைக்க கூடும்.

இதற்கு 14 நாட்கள் ஆகலாம் என்கிறார்கள். ஏன் இந்த 14 நாட்கள் என்று நீங்கள்கேட்கலாம்.

நம்முடைய பூமி தன்னைத்தானே சுற்றிகொள்ள ஆகும் நாள் 24 மணி நேரம் இந்த சுழற்சிதான் நமக்கு இரவையும் பகலையும் அளித்துவருகிறது. அதாவது பூமியின் சுழற்சி நடைபெறும் பகுதிகளில் எங்கெல்லாம் சூரியன் தெரிகிறானோ அங்கெல்லாம் பகலாகிறது. எங்கெல்லாம் நிலவு தெரிகிறதோ அங்கெல்லாம் இரவாகிறது.

ஆனால் பூமியின் துணைக்கோளான சந்திரனின் நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சந்திரனும் சுற்றுகிறது. அதோடு நம்முடைய பூமியையும் சேர்த்தே சுற்றுகிறது. ஆனால் நம்முடைய பூமியைபோல அல்லாமல் சந்திரன் மிகமெதுவாக சுற்றுகிறது.
.
ஒருசுற்று நிகழ 28 நாட்கள் ஆகிறது. பூமிக்கு ஒரு நாள் என்பது 24 மணிநேரம் என்றால் சந்திரனில் ஒருநாள் என்பது 28 நாட்கள். அதாவது பூமியின் கணக்குப்படி பார்த்தால் ஒரு மாதம் என்று கூறலாம். இதில் முக்கியமான விசயம் என்ன வென்றால் பூமி சந்திரன் இரண்டின் சுழற்சி வேகம் வித்தியாசமாக இருப்பதால் நிலாவின் இன்னொரு பக்கத்தை நம்மால் என்றுமே காணமுடியாது.

இந்த ஒரு மாதத்தில் பகல் 14 நாட்கள் இரவு 14 நாட்களாக இருக்கிறது. அதனால்தான் இப்பொழுது சந்திரனுக்கு மிக அருகில் 2.1 கிலோ மீட்டர் தொலைவை நெருங்கியவுடன் விக்ரம் லேண்டரில் இருந்து தன்னுடைய தொடர்பை இழந்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று, 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியில் இருக்கும் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையுடன் கேட்டுகொண்டு இருக்கிறது ஆர்பிட்டர் விண்கலம்..

இஸ்ரோவில் இருந்து 3 லட்சத்து 84ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சந்திரனை சுற்றி கொண்டு இருக்கும் ஆர்பிட்டர் இஸ்ரோவுடன் தொடர்பை தொடர்ந்து வைத்து இருக்கும் பொழுது சந்திரனுக்கு மிக அருகில் அதாவது 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் விக்ரம் லேண்ட் ரோவருடன் தொடர்பை ஏன் ஏற்படுத்த முடியாது?

நிச்சயமாக முடியும். இதற்கான ஒருவாய்ப்பு சந்திரனில் நிகழும் காலமாற்றமே காரணமாக இருக்க முடியும். அதாவது சந்திரனில் 14 நாட்கள் பகல் என்றால் இரவு 14 நாட்கள் என்கிற நிலையில் சந்திரனில் பகலில்வெப்பம் 130 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது இரவில் குளிர் என்பது மைனஸ் 170 டிகிரி அளவுக்கு இருக்கிறது.

இந்த இடத்தில் சந்திராயன்-2 திட்டம் பற்றி ஒருபுரிதல் வேண்டும். இந்த திட்டத்தில் 3 ஆராய்ச்சி கலன்கள் இருக்கிறது. ஒன்று ஆர்பிட்டர். இன்னொன்று விக்ரம்லேண்டர். மூன்றாவது ப்ரக்யான் என்கிற ரோலர். இதில் ஆர்பிட்டர் சந்திரனை 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சுற்றிக் கொண்டு இருக்கிறது.

அதில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சந்திரனுக்கு மிக அருகாமையில் அதாவது 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தன்னுடைய தாய்கலமான ஆர்பிட்டருடன் இருந்த தொடர்பை இழந்துள்ளது. இந்த இடத்தில் விக்ரம்லேண்டரின் வேலையை பற்றி யோசிக்க வேண்டும்.

விக்ரம் லேண்டரிலும் ப்ரக்யான் என்கிற ஒரு நடமாடும் விண்கலம் இருக்கிறது. .இந்த ப்ரக்யானை நிலவில் இறக்கிவிட வேண்டிய வேலை மட்டுமே விக்ரம் லேண்டர் செய்கிறது. அதாவது ஒரு பஸ் அல்லது ஆட்டோ செய்யக்கூடிய வேலையை மட்டுமே செய்கிறது.

இந்த விக்ரம் லேண்டர்க்கு எவ்விதமான பயிற்சி எல்லாம் இஸ்ரோ விஞ்ஞானிகள்அளித்து இருக்கி றார்கள் என்று நீங்கள் தெரிந்து கொண்டால் சந்திராயன்-2 திட்டத்தை பற்றி குறைகூறவே மனது வராது.

கர்நாடகாவில் சித்ரதுர்கா என்கிற ஒரு இடத்தில சந்திரன் மாதிரியே ஒரு செட்டிங் போட்டு அதில் விக்ரம் லேண்டரை சரியாக இறங்க வைத்து ட்ரையல் பார்த்தார்கள்.

எதற்கு தெரியுமா? நிலவில் வட்டவட்டமான நிறைய பள்ளங்கள் இருக்கிறது. இப்படி ஏதாவது ஒரு பள்ளத்தில் விக்ரம் லேண்டர் இறங்கி விட கூடாது என்பதற்காகவே கர்நாடாகாவில் சந்திரன் மாதிரியே செட்டிங் போட்டு, அதில் வட்ட வட்டமாக பள்ளங்களை உருவாக்கி, அதில் இறங்கமால் சமதளத்தில் இறங்க வைத்து ட்ரைனிங் கொடுத்து இருக்கிறோம்.

அதே மாதிரி நிலவில் உள்ள மண்ணோட தன்மையை ஆராய்ந்து, அதேமாதிரியான மண்ணை உருவாக்கி, விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கி, நிலவில் கால் வைக்கும் ப்ரக்யான் ரோலர் விண்கலத்திற்கு நிலவில் நடமாட ட்ரைனிங் கொடுத்து இருக்கிறோம்.

இந்த விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் இறங்கும் ப்ரக்யான் இருக்கிறதே அதுதான் மனிதன் மாதிரி புத்திசாலித்தனமானது.

இதற்கு 6 கால்கள் இருக்கிறது கிட்டத்தட்ட ஒருரோபாட் என்று தான் அதை கூறவேண்டும். நிலவில் மனிதனை இறக்குவதற்கு பதிலாக ஒருரோபாட்டை இறக்கி இருக்கிறோம் அவ்வளவு தான்.

இந்த ரோபாட்டின் வேலை என்ன தெரியுமா? நிலவில் இறங்கி சுற்றிபார்த்து போட்டோ எடுத்து இஸ்ரோவுக்கு ஆர்பிட்டர் வழியாக அனுப்பி வைப்பதுதான். இந்த ப்ரக்யான் ரோலருக்கு வேலை. சந்திரனில் உள்ள பகல் 14 நாட்கள் இரவு 14 நாட்கள் பகலில் உள்ள 130 டிகிரி வெப்பத்தை எப்படி எதிர் கொள்வது இரவு குளிரான மைனஸ் 170 டிகிரி குளிரை எப்படி எதிர்கொள்வது என்கிற சமாச்சாரம் அனைத்தும் அத்துபடியாகும்

இருந்தாலும் விக்ரம் லேண்டரோ, இல்லை ப்ரக்யான் ரோலரோ சந்திரனில் தொடர்ந்து ஒரு 14 நாட்கள் இயங்கமுடியாத சூழலையே எதிர்கொள்ளும். ஏனென்றால் அந்த 14 நாட்களிலும் விண்கலம் இயங்க மின்சாரம் கிடைக்காது. பகல் இருந்து சூரிய ஒளி கிடை த்தால் மட்டுமே அதற்கு மின்சாரம் கிடைத்து இயங்க ஆரம்பிக்கும்.

பூமியில் உள்ள கால நிலையையே நம்மால். இன்றுவரை சரியாக கணிக்க முடியாத நிலையில், 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனின் காலநிலையை நாம் 100 சதவீதமாக சரியாக கணித்து இருக்க முடியாது. அதனால் இப்பொழுது சந்திரனில் 24 மணி நேரமும் முழு இரவாக கூட இருக்கலாம்.

ஆனால் எப்படியும் கண்டிப்பாக 14 நாட்களுக்குள் என்றாவது ஒருநாள் சந்திரனில் பகல் பொழுது திரும்பி சூரியன் ஒளிதென்பட ஆரம்பிக்கிறதோ அப்பொழுது நிச்சயமாக விக்ரம் லேண்டர் மற்றும் ப்ரக்யான் ரோலர் என்கிற 2 விண்கலங்களங்களிலும் உள்ள சோலார் பேனல்கள் மின்சாரத்தை உருவாக்கி தகவல் தொடர்பு சாதனங்கக்கு உயிர்கொடுக்கும்.

அப்பொழுது விக்ரம் லேண்ட் ரோலர் மற்றும் ப்ரக்யான் ரோலர் இரண்டில் இருந்தோ இல்லை இவற்றில் ஏதாவது ஒன்றில் இருந்தோ சந்திரனை சுற்றிக்கொண்டு இருக்கும் ஆர் பிட்டர் சிக்னல்களை பெற்று இஸ்ரோவுடன் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும்.

இன்னொரு முக்கியமான விசயம் என்ன தெரியுமா? சந்திரனை சுற்றிக் கொண்டு இருக்கும் ஆர்பிட்டர்க்கும் சந்திரனில் ப்ரக்யானை இறக்கி விட சென்றுள்ள விக்ரம் லேண்ட்ருக்கும் ஒரு லிங்க் இருப்பதை போல ப்ரக்யான் ரோலருக்கும் ஆர்பிட்டர்க்கும் இடையே தனியாக ஒரு லிங்க் இருக்கிறது.

இதில் ஏதாவது ஒன்று இன்னும் 14 நாட்களில் ஏதோ ஒரு நல்ல நாளில் செயல் பட ஆரம்பிக்கும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

அது மட்டுமல்லாது விக்ரம் லேண்டருக்கும் ப்ரக்யான் ரோலருக்கும் இடையே உள்ள தொடர்பு இப்பொழுதும் இருந்து கொண்டு இருக்கிறது.

அதனால் அண்ணன் விக்ரம் லேண்டரில் இருந்து தம்பி ப்ரக்யான் ரோலர் பிரிந்து நிலவில் கால் வைத்து மேடு பள்ளம் பார்த்து நடந்து கொண்டு இருக்கிறார் என்றே
நான் நினைக்கிறேன்.

நிலவிற்கு 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ந் தேதி லூனா 2 என்ற விண்கலத்தை சந்திரனில் முதன்முதலாக இறங்க வைத்து சந்திரமண்டலம் பற்றிய ஆராய்ச்சியை
முதன் முதலாக தொடங்கி வைத்த ரஷ்யாவே சந்திரனின் தென்துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் தொடர்ந்து 6 முறை முயன்று தோற்று ஒதுங்கி விட்டது.

ஆனால் இந்தியா தன்னுடைய முதல் முயற்சியிலேயே சந்திரனின் தென்துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பி விட்டது. அது நிலவை தொட்டு விட்டதா இல்லையா என்பது தான் இப்பொழுது தகவல் தொடர்பு இல்லாததால் நாம் காண முடியவில்லை. ஆனாலும் நிலவில் ப்ரக்யான் ரோலர் இறங்கி சுற்றி கொண்டு இருப்பதை இன்னும் சில நாட்களில் உலகம் உற்று பார்க்கும்..

முயற்சி செய்தால் நிலவும் தொட்டு விடும் தூரம் தான் என்பதை முன் வைத்து இந்தியா மேற்கொண்டு வரும் சந்திரன் ஆராய்ச்சியில் தொடர்ந்து முயன்று உச்சத்தை தொட்டு விட்டோம் என்று மோடி விரைவில் நாட்டு மக்களிடம் அறிவிப்பார்..

நன்றி விஜயகுமார் அருணகிரி 

Comments are closed.