நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாரதிய ஜனதா தொடங்கிவிட்டது.

தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசனைகளும் நடைபெறுகின்றன. டெல்லியில் நேற்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள், பூத் இன்சார்ஜ் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனையை அமித்ஷா நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய அமைப்பு செயலாளர் ராம்லால், அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் தொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றார். அதாவது பாஜகவின் தேசியத்தலைவர்கள் தொண்டர்களுடன் எளிதாக உரையாடும் வகையிலும், அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையிலும் வாட்ஸ் அப் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தொண்டர்கள் ஒவ்வொருவாரமும் குறைந்த 10 குடும்பங்களை சந்துத்து பாஜக குறித்து எடுத்துரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூட்டத்தில் பேசிய டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ்திவாரி, டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளையும் தக்கவைக்க பாடுபடுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் பிரதமர் மோடியை 2-வது முறையாக பிரதமராக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுதவிர டெல்லி அரசின்தோல்விகள் குறித்து மக்களுக்கு, தொண்டர்கள் எடுத்துரைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply