கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திரமோடி நாட்டை வழிநடத்திச் சென்றவிதம் தேசியளவிலும், சர்வதேச அளவிலும் அவருக்கு பெரும் புகழை சேர்த்துள்ளது. எனவே மக்களவைத்தேர்தலில் பாஜக மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மத்திய உள்துறை அமைச்சராக மிகுந்த மனநிறைவுடன் பணியாற்றியுள்ளேன். வடகிழக்கில் தீவிரவாதசெயல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. கடந்த 1971-க்குப் பிறகு வட கிழக்கு மாநிலங்களில் மிகுந்த அமைதி நிலவுவது இப்போது தான். அந்த அளவுக்கு தீவிரவாத இயக்கங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டுள்ளன. நக்ஸல் பயங்கர வாதத்தை ஒழிக்கும் பணியும் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது.

முன்பு, நக்ஸல்களின் தாக்குதல்களில் நமது வீரர்கள் அதிகமாக உயிரிழந்தனர். ஆனால், இப்போது நக்ஸல்களுக்கு உரியபதிலடி கொடுக்கப்படுகிறது. நக்ஸல்கள் செயல்பாடுகள் ஓரிடத்தில் ஒடுக்கப்படும் போது, மீண்டும் அவர்கள் அதேயிடத்தில் தலைதூக்க முடியாதளவுக்கு பல்வேறு தொடர் நடவடிக் கைகளை மேற்கொள்கிறோம்.

வடகிழக்கு மாநிலங்களை தீவிரவாதத்தின் பிடியில்இருந்து மீட்டதை மத்திய உள்துறை அமைச்சராக எனது சாதனையாக கருதுகிறேன்.
தேசியளவில் நக்ஸல் அமைப்பினர் 126 மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்திவந்தனர். இப்போது 6 அல்லது 7 மாவட்டங்களில் மட்டுமே நக்ஸல்கள் செயல்பட்டுவருகின்றனர். விரைவில் அவர்கள் அனைவரும் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள்.

ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில் அந்தமாநிலத்துக்கு அதிகமுறை சென்று வந்துள்ளேன். எனினும், நாம் விரும்பும் நல்லமுடிவு இதுவரை கிடைக்கவில்லை. ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவரும் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதை பரிசீலிக்கும் காலகட்டத்தில் நாம் உள்ளோம். சிறப்புஅந்தஸ்து காரணமாக அந்தமாநிலம் பெற்றது என்ன, இழந்தது என்ன என்பதை ஆய்வுசெய்ய வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து நிதிபெற்று தேசநலனுக்கு எதிரான காரியத்துக்கு அவற்ற பயன்படுத்தும் 20,000-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்ய ்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் மும்பையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி

Tags:

Leave a Reply