நக்ஸலைட்டுகளை எதிர்கொள்வதற்காக 13 புதியபடைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, ஒருபடையில் பெரும்பாலும் பழங்குடியின இளைஞர்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவின் கீழ் புதியபடைகளை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்வழங்கப்பட்டது.

இதன்படி, மத்திய ரிசர்வ் போலீஸின் கீழ்வரும் சட்டீஸ்கர் படைப் பிரிவில் 4 படைகளும், ஒடிஸô, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் ஆகிய படைப்பிரிவுகளில் தலா 3 படைகளும் அமைக்கப்படவுள்ளன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நக்ஸல் எதிர்ப்புப்படையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்வகையில் வயது மற்றும் கல்வித்தகுதிகளில் சில தளர்வுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply