தமிழ் சினிமாவில் நடிகையாகவும் நடன இயக்குன ராகவும் விளங்குபவர் காயத்திரி ரகுராம். இவர் நள்ளிரவு குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் அபராதம் செலுத்தியதாக செய்திவெளியானது. இந்த செய்தியை மறுத்த காயத்திரி ரகுராம் தன்மீது இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பா.ஜனதாவில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இந்த குற்றச்சாட்டு பற்றி கேட்டார்கள். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன், நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் கிடையாது. வேண்டுமென்றால் டெல்லியில் புகார்சொல்லலாம். பிக்பாஸில் பங்கேற்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரிரகுராம் தெரிவித்தார். அன்றே விலகி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply