எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கிய சாதனையாளர் சங்கருக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.

சங்கர் ஐஏஎஸ் அகடாமியின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சங்கர் நேற்று (வியாழக்கிழமை) இரவு சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக இரங்கல்செய்தி வெளியிட்டுள்ள தமிழிசை, ’’இந்திய அரசு குடிமைப் பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகாலமரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.தென்னாட்டு ஏழை எளிய, நடுத்தரவர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கிய சாதனை யாளரின் இறுதியான விண்ணுலகப் பயணம் நம்மை வருத்துகிறது. அவரது குடும்பத்திற்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.