தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல் படுத்துவதன் சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய நீர் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்தும் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்துடன் கலந்துரையாடினார்.

மேலும், தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள், காவிரி – கோதாவரி நதிகளை இணைப்பது தொடர்பாகவும் இருதலைவர்களும் ஆலோசனை நடத்துவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Comments are closed.