மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல்செய்யவுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள தேசிய நீர்கட்டமைப்பு மசோதாவில், ஆறு, நதிகள்பாயும் மாநிலங்கள், நீரை சுமூகமாக பங்கீட்டுகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒர நதி எந்தெந்த மாநிலங்கள் வழியாக பாய்கிறதோ, அந்த மாநிலங்கள் அனைத்திற்கும் அந்த நதி நீரில் சமஉரிமை உண்டு என்றும், அதனை பொதுசொத்தாக கருத வேண்டும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் மேலாண் மையை நிர்வகிக்கவும், ஆற்று படுகைகளில் மேம்பாட்டிற்காகவும் தனியாக நதி நீர் படுகை ஆணையம் அமைக்கவும் மசோதா வழி செய்கிறது.

நீர்வரத்து, இருப்பு, பங்கீடு தொடர்பான தகவல்களை ஒளிவுமறைவின்றி சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும். மேல் பகுதியில் உள்ள மாநிலம், நதிகள்பாயும் வழியில் ஏதாவதுதிட்டத்தை நிறைவேற்ற விரும்பினால், அதுபற்றி கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலத்துடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப்பின், இந்த தேசியநீர் கட்டமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. காவிரிநீர் பிரச்னையில் தமிழகம், கர்நாடகம் இடையே பெரும்பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், புதியசட்டம் கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

Leave a Reply