தயவுசெய்து முழுமையாக படிக்கவும்….
கொஞ்சம் நீண்ட மொழி பெயர்ப்பு.

மலையாள திரைப்பட இயக்குனரும் சமூக செயற் பாட்டளாருமான கேரளாவின் அலி அக்பர் எழுதுகிறார்.
 

கேரளாவின் முன்னாள் கம்யுனிஸ்டும் தற்போது தேசிய சிந்தனையோடு சங்க அனுபாவியகா இருக்கும்
அலி அக்பர் எழுதுகிறார்.
 

நன்மை
யார் செய்தாலும்
நல்லது என சொல்ல வேண்டும்
என்பது நடைமுறை..

நம்முடைய
ஊடகங்களுக்கு
சேவா பாரதி
என சொல்ல தயக்கம்.
 

Dyfi என சொல்ல
என்ன ஒருசந்தோஷம்…

சங்கத்தினுடைய
நிவாரண பணிகளை குறித்து
சொல்வதற்கு
அரசோ ஊடகங்களோ
தயாரில்லை…..
 

மரங்களை
வெட்டி மாற்ற முடியாத
இடங்களிலிருந்து,

பாதிக்கப்பட்ட மக்களின்
நாவுகளில் மட்டுமே
அந்த ஒலி கேட்க முடிந்தது…
சேவா பாரதி என்று….
 

பெயருக்காகவோ
பெருமைக்காகவோ வேண்டி
சங்கம் வேலை செய்யவில்லை

அதற்கு வேண்டி
சங்கம் ஒன்றும் செய்வதுமில்லை.
 

ஆனால்
பாதிக்கப்பட்ட இடங்களில்
துடக்கம் முதல்
அரைகாக்கி ட்ரவுஸர்கள்,

ஓடியும் நீந்தியும் தோணியிலும்
மக்களை தாங்கிபிடித்து
சுழன்று வருவதை
ஒரு பார்வையாளனாக பார்த்தவன்நான்..
 

ஒரு வேளை
இதை படிப்பவர்கள் நினைக்கலாம்
நான்ஒரு பாஜக காரன்.

அதனால்
இதெயெல்லாம் சொல்கிறேன் என.
 

பலருக்கும்
தெரியாத விஷயம்
ஒரு நாலு வருஷத்திற்கு முன்னால்

நான் ஒரு மிக வைரக்கியமான கம்யுனிஸ்டாக இருந்தேன்..
 

அந்த காலகட்டத்தில் கூட சங்கத்தின் சத்தமில்லா சேவைகளை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

குறிப்பா பூந்துறையில் கலவரம் நடந்தபோது
நான் பூந்துறக்கு பக்கத்தில் திருவல்லத்தில்
தங்கி இருந்தேன்.

 

அந்நேரம்
அந்த பகுதிகளில்
உள்ள முஸ்லீம் குடும்பங்கள் அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்த போது

எனக்கும்
என் குடும்பத்திற்கும்
பாதுகாப்பாய்
காவல் நின்றது
சங்கம் தான்.
 

அதுவரை சங்கத்தினரை எதிரிகளாகத்தான்
நான் பார்த்து வந்தேன்.

அதன் பின்
சாஸ்தமங்கலத்தில்
நான் தங்கி இருக்கும் போதும்

எப்போவாவது உதவிக்கரங்களோடு
சங்கத்தினர்
என் வீட்டிற்கு வருவதுண்டு.
 

நான்
ஒரு கம்யுனிஸ்ட் காரன் எனத்தெரிந்தும்
அவர்கள் என்னை
பிரித்து பார்க்கவில்லை.

இப்பொழுது அவர்களோடு
அவர்களின்
பலவிதமான சேவைகளில்
கலந்துகொள்ள
வாய்ப்புகள் கிடைத்தது.
 

எனக்கும் கூட
சங்கத்தின் சார்பில்
இந்தளவு சேவைகள் நடப்பது
தெரியவில்லை
 

உதாரணமாக
மாற்று திறனாளிகளுக்காக சக்‌ஷமா
என்றொரு அமைப்பு வேலைசெய்து வருவது
இதுவரை யவருக்கும் தெரியாது.

சங்கத்தின் அனாதை இல்லங்கள் போன்று
நான் வேறெங்கும்
இதுவரை கண்டதில்லை
இனி காணப்போவதும் இல்லை.
 

ஒரு விளம்பரமும்
செய்யாமல்
சத்தமில்லாமல்
ஒருஇயந்திரம் போல இயங்கிறது….
சங்கத்தின் சேவைப்பிரிவுகள்.
 

சங்கம் வீடுகள் கட்டி கொடுப்பதும்

உதவிகள் செயவதும் யவருக்கும் தெரியாது.

தெரியப் படுத்துவதும் கிடையாது
என்பதே உண்மை .
 

நான் சங்கத்தினரிடம் கேட்டேன் ஏன்
உங்கள் சேவைகளை குறித்து வெளியில் சொல்லாமலும்

விளம்பரம் செய்யாமலும் இருக்கிறீர்கள்..

என கேட்ட போது நாங்கள் செய்வது
மக்கள் சேவை.
 

அதை செய்வது
எங்களின் கடமையும்
தர்மமும் ஆகும்.

அதனை ஆர்ப்பாடமாக வெளியில் சொல்ல வேண்டியதில்லை…
 

ஆம் அது
அவர்களுடுடைய
கர்மன் ஆகும்…

நூறு நூறு குறும்படங்கள்
அவர்களை குறித்து எடுக்கலாம்
 

ஆனால்
அதற்கு அவர்கள் சம்மதிப்பதில்லை.
 

சாணி சங்கிகள்
என அழைத்தாலும்
அவர்கள் சுழன்று கொண்டே இருக்கின்றனர்.
 

பாதிக்கப்பட்ட
இடங்களில் சேவாபாரதி தொண்டர்களான

மீனவர்வர்கள் இருந்தார்கள்.

ஆனால் அவர்கள்
தாங்கள் சங்கம் என்றோ
சேவா ஒரு போதும் சொல்லவில்லை.

இலட்சகணக்கான
பேர் உணவுப்பொருட்களை சேகரித்தனர்.

300 க்கும் அதிகமான
நிவாரண முகாம்களை நேரடியாக நடத்தினர்.

அதே நேரம் பிற முகாங்களுக்கும்
குடிநீரும் உணவு பொருட்களும் கொடுத்து உதவினர்..

மஞ்சள் கொடியும்
எங்கே இருந்து உதவிகள் வருகிறது
என்கிற சுயசிந்தனை அறியாது.

பச்சை ப்ளக்ஸ்
எல்லாம் வைப்பதில்லை…

ஊடக காமிராக்களுக்காக காத்திருக்கவுமில்லை.

அவர்களுக்கு
தெரிந்தது எல்லாம் ஓட்டம். மட்டுமே.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான ஓட்டம்.

இப்போழுதும்
ஓடிக்கொண்டே இருகின்றனர்.
 

சொந்த
உடல் நிலை மறந்து
குடும்பம் மறந்து

ஊடகங்களால்
கத்திரி போட்டு
வெட்ட முடியாதபடி
கொஞ்சம் காக்கி ட்ரவுஸர்கள் மட்டுமே.
 

ஆட்களுக்கிடையே கடைசியாக நிற்கின்றனர்.

என் விரல்கள் இப்படி எழுதக்காரணம்
இன்று காலையில் ஒருகூட்டம்.

Dyfi தொண்டர்கள்
வாகனத்தில் வந்தவுடன்
அமைச்சர்கள்

தண்ணீர் தெளித்து
சுத்தம் செய்யும் சடங்கினை தொடங்கி வைத்தனர்.

 

இதை பார்த்த
பார்க்கும் போது. .

நேற்று வரை
கக்குஸ் முதற்கொண்டு
சத்தமில்லாமல்
சுத்தப்படுத்திய
சங்கிகளின் பணியினை

தொடங்கிவைக்க
ஒரு பாஜக தலைவர்களும் வரவில்லை
ஊடகங்கள் விவாதிக்கவும் இல்லை.

ஆனால்
Dyfi கடைசி நேரத்தில் வந்த போது ஊடகங்கள் செய்திகளால் நிறைகின்றன…

இதற்கு பெயர்தான்
வாக்கு அரசியல்

இப்போது
சமூக ஊடகங்களில்
செல்பி மழைகளுக்கிடையே ஊடகங்களில்
முக்கிய செய்திகளுக்கிடேயே

மீட்பு பணியில் ஈடுபட்டபோது மரணித்தவர்கள் சடலத்தைக்கூட
கண்டுபிடிக்க முடியவில்லை.
 

அவர்களுடைய வீடுகளை பிணராய்

விஜயனோ அவர்களுடைய ஆதரவாளர்களோ
திரும்பிக் கூடப்பார்க்கவில்லை. என்கிற

கவலைக்குரிய செய்தியையும் கேட்கமுடிந்த்து.
 

எனக்குத்தெரியும்.

ஒரு உரிமையையும் கேட்காமல்
காக்கி நிக்கர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து

அவரவர் வீடுகளுக்கும் திரும்பி போவார்கள்
 

ஆனாலும் சாணி சங்கிகள் என்று தொடர்ந்து அழைக்கப்படுவார்ககள்

அது தான் வரலாறு..
ஆனால்
என்னால் உங்களை கண்டும் காணாமல் செல்ல முடியாது….
 

என் உடல் உழைப்பினை உங்களோடு
செலவிட முடியாததால்
மிக்க வருத்தமும் உண்டு.
 

ஆனாலும்
நான் உங்களோடு தான் இருந்தேன்.

தொலைகாட்சிகளில்
மின்னி மறைந்த
காக்கி நிக்கர்களாகிய
உங்களுடன்.
 

சப்பாத்தி பரத்திய குழந்தைகளுடனும்

அரசிகளை அண்டாக்களில் நிரப்பியவர்களுடனும்

உடல் நிலைகளையும்
பொருட் படுத்தாது
உணவு பொருட்களை
சுமந்து வந்தவர்களோடும்

எந்த தயக்கமுமில்லாமல் கழிவறைகளை
தன் கைகளால்
சுத்தம் செய்த கரங்களுடனும்

நான் இருக்கிறேன்.
 

சேவா பாரதியின்
இதயத்தை தொட்டு வணங்குகிறேன்.
 

உங்களுடைய
மீட்பு பணிகளுக்கு மனபூர்வமான நன்றிகளை தெரிவிக்கிறேன்.
 

யார் உங்களை புறக்கணித்தாலும்
உங்களுக்கு அருகில்
நீங்கள் தொட்டு
ஆறுதல் சொன்ன இதயங்கள் உங்களோடு இருக்கும்

சங்க குடும்பங்களுக்கு என்னுடைய பணிவான கோரிக்கை
என்ன வெனில்

நம்மை இகழும் ஊடகங்களை காலவரையன்றி புறக்கணிக்கபடவேண்டும் .
 

இந்த நிவாரண பணிகள் முடியும் வரை காத்திருக்கிறேன்..
 

சேவாபாரதி தொண்டர்களே

நீங்கள்
பாரத மாதவிற்கு
மிகவும் பிடித்தமானவர்கள்.
 

அதில்
எனக்கு எந்த சந்தேகமும் இல்லை…

திரு. அலி அக்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *