நமது நாட்டின் தொலைநோக்குப் பார்வைக்கு நமதுவிஞ்ஞானிகள் தங்களது வலுவான பங்கேற்பை அளித்து வருகின்றனர். அறிவியலில் சிறந்துவிளங்க இந்தியாவில் அதிக வாய்ப்புகள் குவிந்துகிடக்கிறது. அறிவியல் சார்ந்த சமூக பொறுப்பு, கார்பரேட் சார்ந்த சமூக பொறுப்பு என அனைத்து அறிவியல் சார் நிறுவனங்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.

அறிவியலை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாமல், எளிதான முறையில் கையாள வேண்டும். நமது அறிவை புதிய கண்டுபிடிப்புகளுக்கு பயன் படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் சிறந்த அறிவியல் வளர்ச்சியைப் பெறமுடியும். உலகதரத்திற்கு நமது கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் அமையவேண்டும். அதற்காக நமது அறிவியலை, தொழில்நுட்பத்தை சிறந்தமுறையில் பயன்படுத்த வேண்டும்.

அடிப்படை அறிவியலில் இருந்து தொழில்நுட்பப் பயன்பாடுவரை அனைத்து இடங்களிலும் அறிவியல் சார் தொழில்நுட்பத்திற்கு உதவ மத்தியஅரசு தயாராக இருக்கிறது. தொழில் நுட்பத்திற்கும், மனித உழைப்புக்கும் மிகப் பெரிய சவால் எழுந்துள்ளது. இதை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.நகரங்கள்- கிராமங்களுக்கு இடையிலான வேறுபாட்டை களைவதற்கு தொழில் நுட்பங்கள் உதவ வேண்டும்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழில்நுட்ப பயன்பாடு அவசியம், உற்பத்தித்துறை மேம்பட தொழில்நுட்பம் அவசியம். நகரங்கள்- கிராமங்களுக்கு இடையிலான வேறுபாட்டை களைவதற்கு தொழில்நுட்பங்கள் உதவ வேண்டும்.

நமது சமூகத்தை சக்திவாய்ந்ததாக, வலுவானதாக மாற்ற ஓய்வின்றி உழைத்து கொண்டு இருக்கும் நமது விஞ்ஞானிகளுக்கு நமதுதேசம் நன்றி கடன் பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாம் அனைவரும் எம்ஜிகே . 
மேனனை இழந்தோம். இன்று உங்களுடன் இணைந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து பேசியது

Tags:

Leave a Reply