விழுப்புரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

பாரதிய ஜனதா மீது அனைத்து கட்சியினரும் தற்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதன்மூலம் பாஜக வளர்ச்சி நிலை நன்றாக தெரிகிறது.

கடந்த 2014-ல் பாரதிய ஜனதா 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியை பிடித்து இருந்தது. பின்னர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தோம். அதே போல் வரும் 2019-ம் ஆண்டிலும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும்.

வெளியே இருக்கும் பலகட்சிக்காரர்கள் தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது என்பார்கள். இதை பாரதிய ஜனதா கட்சியினர் கண்டுகொள்ளாமல் உழைப்பை மட்டுமே வியர்வையாக சிந்தி தேர்தலைநோக்கி பணிபுரிய வேண்டும்.

நமது உழைப்புதான் நமக்கு கைகொடுக்கும். தமிழகத்தில் அதிமுக- தி.மு.க. கழகங்கள் அனைத்தும் முடிந்துபோன சரித்திரம். தமிழகத்தில் நிச்சயமாக தாமரை மலரும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply