நமது நாட்டுமகள்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்க ஆண்கள் பொறுப்புடன் செயல்படவேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சமூகத்தில் பெண்கள்பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை அனைவரும் கூட்டாக இணைந்து ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டு கொண்டார். 

இதற்காக சமூக இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், மக்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் அவசரசட்டம் கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களுக்கும், மகள்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆண்களும், மகன்களும் பொறுப்புள்ளவர்களாக மாறவேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply