இன்று பலர் மீத்தேன் அதாவது ஹைட்ரோ கார்பன் எடுப்பது பற்றி பொங்கி எழுகின்றனர்.

ஆனால்…இந்த மீத்தேன் பற்றி இந்தியாவிலும், உலகளாவிய அளவில் மிகச்சிறந்த Geologist…விஞ்ஞானி…(அரங்கனின் மிகச்சிறந்த பக்தர்) திரு ராம்குமார் அவர்கள் சொல்வதை கேளுங்கள்..

இனி ராம்குமார் பேசுவார்…:

எச்சரிக்கை : எனது( dr ராம் குமார்) கருத்துக்கு மாற்று அல்லது எதிர் கருத்து இருப்பின் கீழ் கண்ட தகுதிகளுக்கு மேல் தமக்கு இருப்பதாக நிரூபித்தோர் தமது கருத்தை – அறிவியல் கருத்தை பதிவு செய்யலாம்.

நான் இந்தியன், தமிழன், சுற்றுசூழல் விரும்பி, விவசாயிகளின் நண்பன் என்று கருத்து + அரசியல் சித்து விளையாட விரும்புவோர், எனது FB திண்ணையை விட்டு விட்டு வேறெங்காவது சென்று விளையாடவும்.


பாகம்: -1
===========>>>>>>>>>>>>>>

மீத்தேன் எடுப்பதில் நன்மைகளே அதிகம்.

Strategic ஆகவும் எண்ணை உற்பத்தியில் தன்னிறைவுக்கு இந்நடவடிக்கைகள் அவசியமானவை.

Foreign exchange reserve – ஐ பாதுகாக்கவும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்.

நம்ம கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு அதாவது நம்நாட்டிலுள்ள ஹைட்ரோ கார்பனை விட்டு விட்டு வெளிநாட்டிடம் கையேந்துவது கேவலம்.நமது பொருளாதார, சமூக முன்னேற்றம் எரிபொருள் உற்பத்தி தன்னிறைவை சார்ந்துள்ளது.

கூடாது, மாட்டேன், செல்லாது என்பவரெல்லாம் நாளையிலிருந்து விறகடுப்பில் சமைக்கட்டும்; சமையல் கேஸ் கனெக்சனை வேண்டாமென்று திருப்பி கொடுக்கட்டும்; பைக், கார், பஸ், இரயில், விமான போக்குவரத்தை பயன்படுத்தாமல் காளை மாட்டு வண்டியில் பயணம் செய்யட்டும்.

மற்றொரு முக்கிய செய்தி: டீசல், பெட்ரோல், மண் எண்ணை மட்டுமல்ல, தார் ரோட்டிற்கு asphalt, நூற்றுக்கணக்கான மருந்து பொருட்கள், solvents, fertilizer ஆகியனவும் Crude oil ஐ சுத்திகரிக்கும் போது கிடைக்கின்றன. ஹைட்ரோகார்பன் வேண்டாமென்பவர்கள் அவற்றையும் வேண்டாமென மறுதலிக்கட்டும். மொதல்ல எங்க ஊரில் ரோடு வசதி வேண்டாமின்னு சொல்லட்டும் பாக்கலாம்.

Actually what's the issue?

மோடியா ? உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதா? தேச நலனா? விவசாயமா ?

தனது சக்தியை உணர்ந்து கொண்ட Tech Savvy இளைய சமுதாயத்தை ஏதாவது உணர்வுப்பூர்வமாக வளைத்துப் போட அரசியலாளர் செய்யும் முயற்சியா? நானும் விளையாட்டிலிருக்கிறேன் என்று தன்னை, தமது அமைப்பை முன்னிருத்த கிடைத்த சந்தர்ப்பமாக தொண்டு நிறுவனங்கள் முயல்கின்றனவா? அல்லது பிரச்சனை ஹைட்ரோ கார்பனா?

ஹைட்ரோ கார்பன் என்றால் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது பிரச்சனையா? தமிழகத்தில் எடுப்பது பிரச்சனையா? காவிரி டெல்டாவில் எடுப்பது பிரச்சனையா?

நெடுவாசலில் எடுப்பது பிரச்சனையா? கடந்த சில நாட்களாக ஜியாலஜிஸ்டை தவிர அனைவரும் பேசும் பொருளாக உள்ளது குறித்து எனது கருத்து.

எச்சரிக்கை 1: மோடி தான் உங்கள் பிரச்சனை என்றால், ……. எனது பதில் … மோடி ஒழிக. 2037 க்கு பிறகு ஒழிக.

எச்சரிக்கை 2: எனது கருத்துக்கு மாற்று அல்லது எதிர் கருத்து இருப்பின் கீழ் கண்ட தகுதிகளுக்கு மேல் தமக்கு இருப்பதாக நிரூபித்தோர் தமது கருத்தை – அறிவியல் கருத்தை பதிவு செய்யலாம்.

நான் இந்தியன், தமிழன், சுற்றுசூழல் விரும்பி, விவசாயிகளின் நண்பன் என்று கருத்து + அரசியல் சித்து விளையாட விரும்புவோர், எனது FB திண்ணையை விட்டு விட்டு வேறெங்காவது சென்று விளையாடவும்.

யார் ராம்குமார் அறிந்து கொள்ளுங்கள்…

a. மத்திய அரசின் Directorate of hydrocarbon முதன் முதலாக இந்தியாவிலுள்ள வடிநிலங்களைப் பற்றியும், அவற்றில் ஹைட்ரோ கார்பன் கிடைப்பது, கிடைக்கும் ஹைட்ரோ கார்பன் ஐ இலகுவாக மேலெடுப்பது, அவ்வாறு எடுக்கும் போது நிகழ கூடிய ஆபத்துக்கள் எவை, அவற்றை தடுக்கும் விதங்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தவும், ஆய்வுகள் நடத்த நிபுணர்களை உருவாக்கவும் Delta Studies Institute என்ற பெயரில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு புதிய ஆய்வு நிறுவனத்தை நிறுவியது. அந்த ஆய்வு, கல்வி நிறுவனத்தை உருவாக்கி, பல ஆய்வுகளை முன்னெடுத்து, மற்றும் பல பணிகளை செய்தது Dr.Mu.Ramkumar என்ற Founder Scientist அடியேன் தான்..

b. Hydrocarbon exploration ல் புதிய தொழில்நுட்பமான chemostratigraphy என்ற பிரிவை உலகறியச் செய்யும் விதமாக அறிவியல் உலகின் No.1 பதிப்பாளரான Elsevier மூலம் அத் தொழில்நுட்ப சட்ட திட்டங்களை நிறுவியதும் அடியேன் Dr.Mu.Ramkumar.

c. இப்பிரிவை உலகறியச் செய்யும் விதமாக ஆய்வு நடத்துவதற்காக செருமனி ஜனாதிபதியின் நேரடி நிர்வாகத்திலிருக்கும் Alexander von Humboldt Foundation மூலம் visiting scientist ஆக தொடர்ந்து மூன்றாண்டுகள் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டது Dr.Mu.Ramkumar.

d. Petroleum exploration fieldல் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மலேசியாவிலுள்ள Universiti Teknologi Petronas ல் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு Visiting Scientist ஆக இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டது Dr.Mu.Ramkumar. மேலும் மலேசிய அரசு எமது ஆய்வுக் குழுவுக்கு 3.3 மில்லியன் ஈரோ அதாவது சுமார் 24 கோடி ௹பாய் கொடுத்துள்ளது.

e. பொதுமக்களுக்கு Face book போல ஆய்வாளர்களுக்கு Research gate என்ற வலைத்தளம் உள்ளது. அதில் விஞ்ஞானிகளின் ஆய்வறிவு, ஆய்வுக் கட்டுரைகளின் பயன்பாடு போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பயனீட்டாளருக்கும் தரவரிசை ஸ்கோர் தரப்படும். Dr.Mu.Ramkumar ன் தற்போதய ஸ்கோர் 30.89 அதாவது அவ்வலைத்தளத்தில் உறுப்பினராயுள்ள பல லட்சக்கணக்கானோரில் Top 12.5% ல் Dr.Mu.Ramkumar ன் ஆய்வுத் தரம் உள்ளது.

அதாவது ஹைட்ரோ கார்பன் துரப்பண ஆய்வு குறித்து மேற்கண்டவற்றிற்கு மேலதிகமாக சாதித்தோர் மட்டும் எனது அறிவியற்கருத்துகளுக்கு பதிலிறுக்கலாம். கருத்துக்கள் இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள படி ஒவ்வொரு கேள்விக்குமான பதில்களாக பதிவேற்றப்படும்.

First thing is first:

உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதா? தேச நலனா?

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வரை கிட்டதட்ட 80% வரை இந்தியாவின் ஹைட்ரோ கார்பன் தேவை இறக்குமதி மூலமே நிறைவேற்றப்பட்டு வந்தது. நமது foreign exchange reserve ம் oil import bill Servicing –க்காகவே பெருமளவில் உபயோகப்பட்டு வந்தது. Uல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த dependency குறைக்கப்பட்டு வந்துள்ளது.

உதாரணமாக, Oil Videsh Ltd என்ற நிறுவனம் மூலம் பிற நாடுகளில் நாமே எண்ணை வயல்களை நிறுவி, நமது இந்தியதேவைகளுக்கு பயன்படுத்துவது, இந்தியாவின் Unexplored பகுதிகளை ஆய்வுக்குட்படுத்துவது, ஹைட்ரோ கார்பன் இருக்கலாம் என ஊகிக்கப் பட்டுள்ள ஆழ்கடல் மற்றும் நிலப்பகுதிகளில் தீவிர துரப்பண பணிகளை முடுக்கி விடுவது, joint venture மூலம் மேம்பட்ட தொழில் நுட்பங்களை அயல் நாட்டு நிறுவனங்களை இந்திய பகுதியில் ஆய்வு நடத்த செய்தல், ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உற்பத்தியை துவக்குவது, உற்பத்தி நடைபெறும் கிணறுகளில் recovery rate – ஐ அதிகப்படுத்துவது, சிறிய எண்ணைவயல்களிலிருந்து உற்பத்தியை ஆரம்பிப்பது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

(இன்னும் வரும்)

நன்றி Vijayaraghavan Krishnan

Leave a Reply