நம்பகத்தன்மை மிகுந்த நண்பனாக உலகநாடுகள் இந்தியாவைப் பார்ப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

ஸ்வீடனில் ஸ்டாக்கோம் பல்கலைக் கழகத்தில் இந்திய வம்சா வளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று உரைநிகழ்த்தினார். அப்போது, உலகில் உள்ள நாடுகளில் சிறியநாடுகளாக இருந்தாலும், பெரியநாடுகளாக இருந்தாலும் அனைத்தும் இந்தியாவை உற்ற நண்பனாகப் பார்ப்பதாக பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார். ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் எந்தபிராந்தியத்தை சேர்ந்த நாடுகளாக இருந்தாலும், அவை இந்தியாவை நம்பகத்தன்மை மிகுந்தநண்பனாகப் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். 

இந்தியா வேகமாக மாறிவருவதாகக் கூறிய பிரதமர், நாட்டின் மதிப்பை உயர்த்தவும், புதிய உச்சத்திற்கு நாட்டை இட்டுச்செல்லவும் அல்லும் பகலும் தமது அரசு பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்தியாவில் கடந்த காலங்களில் சமையல் எரிவாயு கிடைப்பதில் இருந்தசிரமத்தைச் சுட்டிக்காட்டிய அவர், ஆனால், தற்போது சமையல் எரிவாயு தாராளமாக கிடைத்துவருவதாகத் தெரிவித்தார். 

இந்தியாவில் இருந்துவந்து ஸ்வீடனில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் இந்தியாவின் தூதர்கள் என தெரிவித்த நரேந்திர மோடி, தாய்மொழி வேறுபட்டாலும், நம் அனைவரையும் இந்தியா என்ற ஒற்றைச்சொல் இணைப்பதாகக் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியுடன், ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோவெனும் கலந்து கொண்டார். ஸ்வீடன் பயணத்தை முடித்துக்கொண்ட நரேந்திர மோடி, அங்கிருந்து பிரிட்டனின் லண்டன் நகருக்குச் சென்றடைந்தார். 

முன்னதாக, ஸ்டாக்கோமில் நடைபெற்ற இந்தியா-நோர்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது, ஸ்வீடன், டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து ஆகியநாடுகளின் தலைவர்களை அவர்சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, உச்சி மாநாட்டில் பங்கேற்ற 6 நாடுகளும், தங்களுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உறுதி மேற்கொள்ளப் பட்டது.

Leave a Reply