தமிழகத்தின் தொகுதிப் பொருப் பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார் பிரதமர் மோடி.

அப்போது நிர்வாகிகள் கேட்ட பலகேள்விகளுக்கு பதிலளித்தார். பாஜக மற்றும் மோடியின் இமேஜை கேள்விக் குள்ளாக்கியிருக்கும் ரஃபேல் போர்விமான கொள்முதல் விவகாரம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அப்போது, “பொருளாதார நிர்வாகதிறன் இல்லாததும், ஊழல்களும்தான் கடந்ததேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்விக்கு காரணம் என அனைவரும் கருதுகிறார்கள். ஆனால், அதையும் தாண்டி சிலமுக்கிய காரணங்களும் இருக்கின்றன. தேசத்தின் பாதுகாப்புத் துறையை பல ஆண்டுகளாக புரோக்கர்களின் கூடாரமாக மாற்றி வைத்திருந்தது காங்கிரஸ்.

பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம் எப்போது நடக்கும் என்பதைகூட, ரஃபேல் இடைத்தரகரான ( புரோக்கர் ) மைக்கேல் தெரிந்து வைத்துள்ளார். அரசு ஆவணங்கள் தொடர்பான பலவிபரங்கள் கூட தெரிந்து வைத்துள்ளார். ரஃபேல் ஒப்பந்தத்தை 10 ஆண்டுகள் தாமதப்படுத்தி உள்ளார் மைக்கேல். அப்படியெனில், நாட்டின் பாதுகாப்பை ஆபத்தாக்கும் எத்தகைய பங்களிப்பு அவருக்கு இருந்துள்ளது என்பதை யோசித்துப்பாருங்கள். அந்த இடைத்தரகர் சோனியா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரியும்”

மேலும், தமிழகத்தில் யாருடன், பா.ஜ., கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தமிழகத்தில் கூட்டணிகதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பாஜ.,வின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாயின் வழியிலேயே பா.ஜ.க., செயல்படும். அரசியல் பிரச்னைகள் எத்தனை இருந்தாலும் வெற்றிபெறுவது மக்களுடனான கூட்டணியே. மத்தியில் பா.ஜ., பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றாலும், கூட்டணியுடனே பா.ஜ., ஆட்சி அமையும். நம்பிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணி அமையும். கட்டாயத்தின் அடிப்படையில் இல்லை. பழைய நண்பர்களை வரவேற்க பா.ஜ., தயாராக உள்ளது என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply

Your email address will not be published.