மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கொண்டு வர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வெறும் அரசியல்நாடகம் என பா.ஜ., பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், எங்களுக்கு போதிய பெரும்பான்மை உள்ளது. அதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி எங்களுக்கு எந்தபயமும் இல்லை. இது தெலுங்குதேசம் கட்சியின் அரசியல் நாடகம். அரசியல் விளையாட்டில் சந்திரபாபு நாயுடுவை யாரும் மிஞ்சமுடியாது. அரசியல் தந்திரங்கள் செய்வதில் அவர் வல்லவர்.

ஆந்திர வளர்ச்சிக்காக அவர் கோரிக்கை வைத்தால் நாங்கள் அவர்பக்கம் இருப்போம். ஆனால் அவர் பேசுவது அனைத்தும் அரசியல் நாடகம், தெலுங்குதேசத்தின் அரசியல் விளையாட்டு. எந்த சவாலையும் சந்திக்க பா.ஜ.,வும், தேசிய ஜனநாயக கூட்டணியும் தயாராக உள்ளது என்றார்.

Leave a Reply