நம் நாட்டின் கடன்சுமை சமாளிக்க கூடிய அளவில் இருப்பதால் அது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

கடந்த 2013-14 நிதியாண்டின் இறுதியில் ரூ.53.40 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் கடன்சுமை, கடந்த ஆண்டு மார்ச் தொடங்கி ஆண்டு இறுதி வரையிலான காலத்துக்குள் ரூ.59.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.

இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இது தொடர்பாக கூறும்போது, ''நாட்டின் கடன்சுமை சமாளிக்க கூடிய அளவில் உள்ளது என்று மதிப்பீடுகளும், அறிகுறிகளும் தெரிவிக்கின்றன. அதாவது, தற்போது வாங்கப் பட்டுள்ள கடன் அளவும், அதற்கான வட்டியும் சமாளிக்கும் வகையில் உள்ளன.

தற்போது நிலைமை சீராகிவருகிறது. மத்திய அரசின் கடன்சுமைகள் அனைத்தும் நடுத்தர காலளவில் அடைக்கப் படக்கூடிய அளவில் உள்ளன. காலநீட்டிப்பு கோருவதற்கான அபாயம் குறைவாகத்தான் உள்ளது" என்றார்.

Leave a Reply