சென்ற ஆண்டு சகிப்புத் தன்மை குறித்து தெரிவித்த கருத்தால் பல அரசியல் தலைவர்களின் விமர் சனத்திற்கு ஆளானவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இந்நிலையில், 'ஆப்கி அதாலத்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:-

நான் ஒன்றை மிகத் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். நம் நாட்டின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் நாம் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நரேந்திர மோடியை மக்கள் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுத் துள்ளனர். எனவே, நம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல நாம் அவருக்கு ஆதரவை வழங்கவேண்டும். அரசியலில் வேண்டுமானால் சகிப்புத்தன்மை குறித்து மாற்று கருத்துக்கள் எழுந்திருக்கலாம். ஆனால், நாம் அரசியல்வாதிகள் அல்ல. நாம் கலைத் துறையை சேர்ந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால், நம்மை சிறுவர்கள் பார்க்கிறார்கள். நம்மைபோல வெற்றியாளர்களாக வரவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். எனவே, நமது நாட்டுக்கு எதிராக எந்த ஒருகருத்தையும் நான் ஒருபோதும் பேசியதில்லை. எந்த அரசியல் கட்சியுடனும் எனக்கு பிரச்சனைகள் கிடையாது.

மத, இன, நிறத்தின் அடிப்படையில் இளைஞர்கள் பாகுபாடு பார்க்கக் கூடாது. எனது தந்தை சுதந்திரபோராட்ட வீரர்களுள் ஒருவர். இந்தியா போன்ற ஒரு சிறந்த நாட்டில் இருந்து எல்லாவற்றையும் பெற்றுவிட்டு நான் எப்படி இந்தியாவுக்கு எதிராக பேசமுடியும். எனது குடும்பமே ஒருசிறிய இந்தியா போன்றதுதான். எனது மனைவி இந்து மதத்தை பின்பற்றுபவர். நான் பிறப்பால் ஒருமுஸ்லீம். எனது 3 குழந்தைகளும் 3 மதங்களை பின்பற்றுகிறார்கள். அப்படி இருக்கும் போது நான் எப்படி இந்தியாவுக்கு எதிராக சிந்திக்க முடியும்.

இவ்வாறு நடிகர் ஷாருக்கான் பேட்டியளித்தார். 

Tags:

Leave a Reply