பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் சுற்றப் பயணமாக இந்த வாரம் டோக்கியா செல்கிறார். அப்போது, வளர்ச்சித் திட்டங் களுக்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக ஜப்பான் நாட்டு செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கை பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்து வதுடன் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அணு சக்தி நிறுவனங்களை அமைக்க வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது வளர்ச்சித் திட்டங்களுக்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஓப்பந்தம் ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது. ஆனால் சில பிரச்னைகளால் இந்நாள்வரை அந்த நடவடிக்கை முடிக்கப் படாமல் இருந்தது.
 
இந்நிலையில், பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப்பயணம் செய்வதை முன்னிட்டு வருகிற வெள்ளிக்கிழமை அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக அந்தநாட்டு செய்திநிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அணு சக்தி தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு ஜப்பான் வழங்கும். அணு ஆயுதபரவல் தடை ஒப்பந்தத்தில் கையெடுத்திடாத நாட்டிற்கு ஜப்பான் அணுசக்தி தொழில் நுட்பத்தை இதுவரை வழங்கியதில்லை. அந்தவகையில் அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தொழில்நுட்பத்தை பெரும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு வந்துசேரும். இந்தியா அணுசக்தி சோதனை நடத்தினால் அணு சக்தி ஓத்துழைப்பு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளவும் இரு நாடுகளும் ஓப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற 11-ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார்.

Leave a Reply