இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் செயல் முறையை உருவாக்கும் விதமாக தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், வரும் 29-ம் தேதி முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்கும் விதமாகவும், இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றும் விதமாகவும் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

ஜவுளித்துறை, மோட்டார் வாகனங்கள், ரசாயனம், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட 25 துறைகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதற்கான செயல் திட்டத்தை உருவாக்கும் வகையில் வர்த்தம், தொழில் துறை அமைச்சகம் சார்பில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் தலைமை செயலர்கள் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்கின்றனர். இந்தத்திட்டம் குறித்து ஒவ்வொரு துறையைச்சேர்ந்த தலைவர்களிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் குறித்த முழுசெயல்திட்ட வரைவு தயார் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply