பிரதமர் நரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும். நாற்பது இடங்களிலும் எதிர்க் கட்சிகள் பல வீனமாக உள்ளன.
ஏழை விவசாயிகளைப் பற்றி கொஞ்சம்கூட சிந்திக்காத முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதை கொச்சைப்படுத்தினால் இந்திய விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்.

மார்ச் 6-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருகிறார். பிரதமர் மோடியின் வருகை சரித்திர மாற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தும். தேமுதிக.,வுக்கு உரியமரியாதை கொடுக்கப் பட்டுள்ளது. கூட்டணிக்கு வந்தாலும் உரியமரியாதை அளிக்கப்படும். கூட்டணியில் எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம் தான் பெரியது என்றார்.

Leave a Reply