கர்நாடக மாநிலம் மண்டியாவின் மலவள்ளிதொகுதி எம்எல்ஏ.வும், தற்போது காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர சாமிக்கு ஆதரவாக முதல்மந்திரி சித்தராமையா பிரசாரம்செய்தார். காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளையும், எம்.எல்.ஏ.வின் பணியையும் புகழ்ந்துபட்டியலிட்டு பேசினார். இப்போது அனைத்து கிராமங்களிலும் சாலைப் பணிகள், குடிநீர் வசதி, வீடுகட்டும் பணிகள், அனைத்தும் நமக்கு சாத்தியமானது என்றால் நரேந்திர மோடியாலும், நம்மாலும்தான்” என்று சித்தராமையா பேசியதும் வேட்பாளர் நரேந்திரசாமிக்கு பெரும் அதிர்ச்சி நேரிட்டது.

 

 எப்போதும் மோடியையே நினைத்து அஞ்சி கொண்டிருந்த சித்தராமையாவிற்கு நாக்குத் தவறிவிட்டது. நரேந்திர சாமிக்கு பதிலாக நரேந்திர மோடியை பராட்டிவிட்டார். உடனேயே சாரி! சாரி!! நரேந்திரசாமி முக்கியமான வார்த்தை என கூறி சித்தராமையா தப்பித்துக் கொண்டார்.  தனால் அங்கு சில நொடிகள் சலசலப்பு உண்டானது. தவறை திருத்தி கொண்ட முதல்–மந்திரி சித்தராமையா நரேந்திரசாமிக்கு ஓட்டுப்போடும்படி கூறினார்.

Leave a Reply