பீகாரின் துணை முதல்வர் சுஷில்குமார் ஞாயிறன்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது, அடுத்த வருடம் வரு இருக்கும் பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பினை அளிக்கவேண்டுமென வலியுறுத்தினார்.

2005-ம் ஆண்டு நவம்பரில் ஆட்சிக்குவந்த பாஜக மற்றும் ஜனதா தளம் மிகவும் பின் தங்கிய மக்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்கியது என்று சுஷில் மோடி கூறினார்.

பீகாரின் மாதுபானி பகுதியில் மிகவும் பின் தங்கிய மக்களை சந்தித்த சுஷில் மோடி 2019 லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராக வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி, கட்சியின் ஆட்சியைவீழத்த நினைக்கும் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளத்தின் கூட்டு சதியை உடைக்க உதவிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இப்பகுதியில், 15 வருடங்களாக ஆட்சி புரிந்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் மிகவும் பின்தங்கிய மக்களை மோசமாக நடத்தினார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.