பிரதமா் நரேந்திர மோடியின் சொத்துவிவரத்தை பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் பிரதமருக்கு சொந்தமாக காா், பைக் இல்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் ரூ.1 கோடி மதிப்பில் சொந்த வீடு உள்ளது என்றும், அதில் மோடிக்கு நான்கில் ஒரு பங்கு உள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

மோடியின் சொத்து மதிப்பு 2.28 கோடியாகும். இதில் 1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498 அசையும் சொத்துகளின் மதிப்பும் உள்ளடங்கும். காந்தி நகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் மோடியின்கணக்கில் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 690 பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மோடியின் பெயரில் எந்தகாரும் இல்லை. சமீபத்தில் பிரதமா் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது பெயரில் எந்தவாகனமும், விமானமும், கப்பலும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தாா்.

மேலும் பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி எந்த தங்க நகையும் வாங்கவில்லை. அவா் ஏற்கனவே வைத்திருந்த 4 தங்கமோதிரங்கள் மட்டுமே கைவசம் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.