உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவுஉள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.


அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் திங்கள் கிழமை பாஜக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசிய தாவது: கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் முக்கிய முயற்சியாக, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ்பெறும் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்தமாதம் வெளியிட்டார். அவரது இந்த துணிச்சலான முடிவை நாட்டுமக்கள் பெருவாரியாக ஆதரவு அளித்துள்ளனர். இதற்காக பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


கருப்புப்பணத்தையும், ஊழலையும் ஒழிக்கவேண்டும் என்பதில் எவ்வித சமரசமின்றியும், சந்தேகத்துக்கும் இடமின்றி மத்திய அரசு போராடிவருகிறது.


ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப்பிறகு மக்கள் பலசிரமங்களை எதிர்கொண்டது உண்மைதான். ஆனால், இப்போது நிலைமை சீரடைந்து வருகிறது. ஏடிஎம் வாசல்களில் மக்கள் சிலமணிநேரம் காத்திருந்தது உண்மை தான். ஆனால், இதுதொடர்பாக மக்கள் கருத்து தெரிவித்தபோது, "நமது தேசத்தை எதிரிகளிடம் இருந்து காக்க எல்லையில் நமதுவீரர்கள் உயிரை தியாகம் செய்து வருகின்றனர்.

அதனுடன் ஒப்பிடும்போது ஏடிஎம் வாசல்களில் சிலமணி நேரம் காத்திருப்பது நாட்டுக்காக செய்யும் பெரியதியாகம் இல்லை' என்றுதான் கூறியுள்ளனர்.


மத்திய அரசின் திட்டங்களால் ஏழைகளும், விவசாயிகளும் அதிகம் பயனடையவேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இப்போது தான் இந்தியா உண்மையான வளர்ச்சியை நோக்கிப்பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய – வங்கதேச எல்லைவரும் 2018-ஆம் ஆண்டில் முழுமையாக மூடப்படும். அஸ்ஸாம் மாநில மக்களின் தனியுரிமையைக் காப்பதில் பாஜக முழு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply