‘மசூத் அஸாரை, சர்வதேச பயங்க ரவாதியாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்திருப்பது, இந்தியாவின் ராஜதந்திரத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கும் கிடைத்திருக்கும் வெற்றி’

சர்வதேச நாடுகளிடமிருந்து, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திரமோடி எடுத்த முயற்சிகளின் பலனாக, மசூத் அஸார், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானில், 35க்கும் அதிகமான பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன.பிரதமர் மோடி, சர்வதேச அரங்கில் தனக்கு கிடைத்த ஒவ்வொரு தளத்திலும், இதை ஆதாரபூர்வமாக எடுத்துக்கூறி, உலக நாடுகளை ஏற்றுக் கொள்ள வைத்தார்.

அவரது தலைமையிலான அரசின், ராஜதந்திர முயற்சிகள்தான், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், இந்த அறிவிப்புக்கு முக்கியகாரணமாக இருந்திருக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், இந்தியா வெற்றி அடைந்துள்ளது. ஒவ்வொரு இந்தியனும், இதைகொண்டாடுகிறான். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, இந்த கொண்டாட்டத்தில் இணைவதற்கு, காங்கிரஸ் அச்சப்படுகிறது.

அதற்கு காரணமும் உள்ளது. இந்தவெற்றியில் தங்களை இணைத்துக்கொண்டால், அரசியல் ரீதியாக தோற்று ப்போவோம் என, அக்கட்சி கருதுகிறது. தங்களது ஆட்சி காலத்திலும், துல்லிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக, அக்கட்சியினர் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதுபோல, துல்லிய தாக்குதல்கள் நடைபெற்று இருக்கலாம். ஆனால், அந்த தாக்குதல்கள் எல்லாம், கண்ணுக்குத் புலப்படாதவை; யாரும் அறிந்திருக்கவும் இல்லை.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், புல்வாமா தாக்குதல்குறித்தோ, காஷ்மீர் பிரச்னை குறித்தோ, தன் அறிவிப்பில் கூறவில்லையே என்றகேள்வி, தேவையற்றது. காரணம், இவை முக்கிய விஷயங்கள் அல்ல.மசூத் அஸார், சர்வதேச பயங்கர வாதியாக அறிவிக்கப்ப ட்டிருக்கிறான் என்பதுதான் முக்கிய விஷயம். இந்த அறிவிப்பின் விளைவுகளை, அவனும், பாகிஸ்தான் அரசும் அனுபவிக்கப் போகின்றன.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், இந்த முடிவுக்கு வருவதற்கு, நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. சீனா தரப்பு வைத்த முட்டுக்கட்டையே , இதனால் இந்தியா பலன் அடையும் என்பதே, இதற்கு காரணம். ஆனாலும், புல்வாமா மற்றும் பாலகோட் சம்பவங்களுக்கு பிறகு, சீனா, தன் அணுகுமுறையை மாற்றிக் கொண்டது. தனது நிலையை மாற்றிக்கொள்ள வைக்கப்பட்டது. இது மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

Leave a Reply