உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் விவகாரத்தில், பாஜகவினர் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். அந்த விவகாரத்தை பயன் படுத்தி, மக்களின் ஆதரவை பாஜக தொண்டர்கள் திரட்ட வில்லை. இதை நாம் ஒப்பு கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், அதேநேரத்தில் நாம் எதிர்பார்க்காத சிலர் நமக்கு ஆதரவு அளித்தனர். தெலங்கானா, ஆந்திரம், பிகார் மாநிலங்களின் முதல்வர்கள் மத்தியஅரசின் முடிவுக்கு ஆதரவு அளித்தனர்.


உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ்பெறும் மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன. அப்போது அந்தமுடிவால் ஏதோ நன்மை ஏற்படப்போகிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பார் என்பதையும் மக்கள் தெரிந்துகொண்டனர்.


உலகம் முழுவதிலும் இருக்கும் அரசியல் கட்சிகளில், மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் பாஜகதான் மிகப் பெரிய கட்சி. நாடு முழுவதும் பாஜகவில் 11 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி பலம்குறைந்து, கருத்தியலான கட்சியாகி விட்டது.


மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இதேபோன்ற வெற்றியை தெலங்கானாவிலும் பாஜக பெறவேண்டும். இதற்கு கட்சித்தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஒடிஸூ, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக மாறியுள்ளது. வருங்காலத்தில் இந்தமாநிலங்களில் ஆளும் கட்சியாக பாஜக உருவெடுக்கவேண்டும்.

 மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு  ஹைதராபாதில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் சனிக்கிழமை பேசியது:

Leave a Reply