பிரதமர் நரேந்திர மோடி சக்திவாய்ந்த தலைவர் என்பது சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது என பா.ஜ.க செயற் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சிலமுக்கிய தீர்மானங்கள் வருமாறு:–

நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் இந்தியா பற்றிய நல்லெண்ணம் உலகஅளவுக்கு பரவியுள்ளது. உலகமே இந்தியாவின் வளர்ச்சியை எதிர்நோக்கி உள்ளது.

மோடி அரசின் நலத்திட்டகொள்கைகள் புரட்சிகரமானவை. அரசின் வளர்ச்சிதிட்டங்கள் தொடர 2019–ம் ஆண்டிலும் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் உறுதியேற்கவேண்டும்.

மக்கள் சாதி, மதரீதியாக இல்லாமல் முதல் முறையாக வளர்ச்சிக்காக வாக்களித் துள்ளனர். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பெற்றசாதனை வெற்றி இதனை உறுதிசெய்கிறது. சமீபத்திய தேர்தல்முடிவுகளின் மூலம் சுதந்திரத்துக்கு பின்னர் மோடி மிகவும் சக்தி வாய்ந்த பிரபல தலைவர் என்பது நிரூபணமாகிறது.

தேர்தல் சீர்திருத்தம், அரசியல் கட்சிகளின் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை ஆகியவை இந்த அரசின் வரலாற்றுசாதனை.

மோடி அரசின் தலைமையின் கீழ் இஸ்ரோநிறுவனம் ஒரேராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை ஏவி உலகசாதனை படைத்துள்ளது என்பது உள்பட பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புவனேசுவரம் ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில், மோடி பழங்குடியின சுதந்திரபோராட்ட தியாகிகளின் குடும்பத் தினரை கவுரவப்படுத்தினார். அப்போது அவர், சுதந்திரபோராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் நாடுமுழுவதும் 50 இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்றார்.

பின்னர் புவனேசுவரத்தில் உள்ள 11–ம் நூற்றாண்டு சிவன்கோவிலான லிங்க ராஜ் கோவிலுக்கு சென்று வணங்கினார். லிங்க ராஜ் மற்றும் பார்வதி தேவி சாமிகளுக்கு சிறப்புபூஜைகள் நடத்திவழிபட்டார். கோவிலுக்கு செல்லும்வழியில் ஏராளமான மக்கள் திரண்டு நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply