உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானோர் புழங்கும்  சமூக ஊடகமான  ‘பேஸ்புகின்’ தகவல்களை, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் செயல்படும் தேர்தல் பிரச்சார  நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ சட்ட விரோதமாக திருடிய தகவல் சமீபத்தில் வெளியானது.

மேலும் அமெரிக்க  ஜனாதிபதி தேர்தலில்  தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் வெற்றிக்காக 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் தகவல்களை திருடி முறைக்கேடில் ஈடுபட்டதும். இதை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ஒப்புக்கொண்டதும், இத்தகைய மோசடி நிறுவனத்துடன், இந்தியாவில் ஊழல், மோசடி, பிரிவினைவாதத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பிருப்பதும், ராகுலின் சமூக வலைதள பிரசாரங்கள் அனைத்தையும், அந்நிறுவனமே கவனித்து வருவதும் கூடுதல் தகவலாகும்.

இந்நிலையில் தான் இந்த பிரச்சனையை திசை திருப்பும் விதமாக,  நரேந்திர மோடியின் ‘நமோ ஆப்’ என்னும் ஆன்ராய்ட் செயலி மூலம் பொதுமக்களின் அந்தரங்க தகவல்கள் திருட படுவதாகவும், இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களின் பெயர், புகைப்படம், பாலினம் போன்ற ரகசிய குறிப்புகள் அனைத்தும் அவர்களின் சம்மதம் இல்லாமலேயே http:n.wzrkt.com என்னும் மையதளத்தை சென்றடைவதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி வருகிறார்கள் .

இதை வெளிநாட்டில் இருந்து ஏதேனும் நிறுவனம் சொன்னால் தான் நம்புவார்கள். என்பதற்காக பிரான்ஸ் நிறுவனத்தை வைத்து சொல்ல வைத்துள்ளார்கள். பொதுவாக நரேந்திர மோடி ஆப் (செயலி), மோடியின் திட்டங்களை, எண்ணங்களை உடனுக்குடன் மக்களிடம் பகிர்ந்து கொள்ளவும், அவர்களது கருத்துக்களை, ஆலோசனைகளை, திட்டங்களில் உள்ள குறை பாடுகளை உடனுக்குடன் பெறவும் பெரும் அளவில் உதவி வருகிறது.

 

மேலும் நாட்டின் பிரதமர் சாமாநியனுடன் சகஜமாக பழகும் ஒரு சுமூக சூழலையும் உருவாக்கி தந்துள்ளது,. தற்போதைய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பிறப்பிடமாகவும், திட்டங்களின் குறைகளை சரிசெய்யும் ஆலோசனை கூடமாகவும் இருந்து வருகிறது என்றால் அது  மிகையாகாது.

இன்று உலகம் முழுவதில் இருந்தும் அதிகமானோர் பயன்படுத்தும் செயலிகளில் இதுவும் ஒன்று. இதில் தரப்படும் தகவல்களை திருடி பாஜக.,வோ, மோடியோ செய்திட ஒன்றும் இல்லை. ஒரு தலைவரை விரும்பி ஒருவர் தானாக தரும் தகவல்களை, அந்த தலைவர் தங்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்துவதிலும் எந்த தவறும் இல்லை.

ஒரு பொது நோக்கத்துக்காக உருவாக்க பட்ட ஒரு செயலியில், பேஸ்புக்’ போன்ற சமூக ஊடகத்தில், உலாவும்  பால கோடி  பயனாளிகளின்  தகவல்களை தங்கள் சுய லாபத்துக்காக திருடுவது, அவர்களிடம்  தவறான தகவல்களை மட்டுமே பரப்புவது இதுதான்  தவறு. இதைத் தான் ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு செய்தது, இந்தியாவில்  ராகுல் காந்திக்கு செய்ய காத்திருந்தது. தங்கள் குட்டு  வெளியானவுடன் ‘நமோ ஆப்’ மீது திசை திருப்ப படுகிறது. . இதுவும் ராகுலுக்காக ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’வின் தேர்தல் யுத்திகளில் ஒன்றாக கூட இருக்கலாம். 

முந்தைய காங்கிரஸ் அரசு பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டின் சட்ட விரோத குடியேறிகளுக்கு மட்டுமே ஆதாரை தர முனைப்பு காட்டியது, தற்போதைய மோடி அரசு 111 கோடி (99%) இந்தியர்களுக்கு ஆதாரை தந்தே விட்டது, சட்ட விரோத குடியேறிகளை விரட்டும் பணிகளையும் தொடங்கி விட்டது. ஆதாரை அடிப்படையாக கொண்டு 31 கோடி வங்கி கணக்குகள் தொடங்க பட்டுள்ளன. வங்கிகளுக்கு நேரடியாக மானியத்தை மாற்றியதன் மூலம் 83000 கோடி சேமிக்க பட்டுள்ளது. இவைகள் அனைத்தையும் நவீன தொழில் நுட்பங்களே சாத்தியமாக்கின.      

எனவே நவீன தொழில் நுட்பங்கள் மூலம் எத்தனையோ மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வரும்  மத்திய அரசுக்கு, பொது மக்களின் தகவல்களை திரட்ட ‘நமோ ஆப்’பை தான் பயன் படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லையே, அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறதே. 

நன்றி; தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply