நாகலாந்தில் பா.ஜ.க, கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியை கவர்னர் ஆட்சிஅமைக்க அழைப்பு விடுத்துள்ளார். அக்கட்சியின் நெய்பியு ரியோ தலைமையில் ஆட்சிஅமைய உள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் நடந்த சட்ட சபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பா.ஜ., – என்.டி.பி.பி., கூட்டணி கட்சி 29 இடங்களையும், என்.பி.எப்., 29 இடங்களையும் பிடித்துள்ளது. ஜனதாதள கட்சி 1 இடத்தையும், சுயேட்சை வேட்பாளர் ஒருஇடத்தையும் பிடித்துள்ளார். ஆட்சியமைக்க 31 சீட்டுகள் தேவைப்பட்ட நிலையில் ஜனதாதள கட்சியும், சுயேட்சை வேட்பாளரும் பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து நாகலாந்தில் பா.ஜ., அமைப்பது உறுதியானது.

இந்நிலையில் நாகலாந்து கவர்னர் பி.பி.ஆச்சாரியாவை சந்தித்து என்.டி.பி.பி.,யின் நெய்பியு ரியோ ஆட்சியமைக்க உரிமைகோரினார். அவருடன் பா.ஜ.,வின் ராம் மாதாவும் கவர்னரை சந்தித்தார். இதனையடுத்து கூட்டணியுடன் சேர்ந்து 32 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் என்.டி.பி.பி., கட்சியை ஆட்சிஅமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
 

திரிபுராவில் பா.ஜ., அமோகவெற்றி பெற்ற நிலையில், இழுபறி நீடித்தமேகாலயா, நாகலாந்து இரண்டிலும் பா.ஜ., கூட்டணியே ஆட்சி அமைப்பது வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.,வின் கால் அழுத்தமாக ஊன்றியுள்ளது தெளிவாகிறது.

Leave a Reply