நாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட உணவுபூங்கா அமைய முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின்கட்காரி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

யோகா குரு பாபா ராம் தேவ் தன்னுடைய ‘பதாஞ்சலி’ குழுமம் மூலம் மூலிகைபொருட்களை நாடு முழுவதும் விற்பனைசெய்து வருகிறார். இதையொட்டி, நாக்பூர் மிகான் பகுதியில் பிரமாண்ட உணவு மற்றும் மூலிகைபூங்கா அமைக்க மாநில அரசிடம் அனுமதி கோரினார்.

இதற்காக அவருக்கு நாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த உணவு பூங்காவுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், ‘‘பதாஞ்சலி குழுமத்துக்கு நிலம் ஒதுக்கீடுசெய்தது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றது. ஏக்கர் தலா ரூ.25 கோடி வீதம் பதாஞ்சலி குழுமத்துக்கு நிலம் ஒதுக்கப் பட்டது’’ என்றார்.

இந்த மாபெரும் உணவுபூங்கா மூலம் சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறிய பாபாராம்தேவ், பதாஞ்சலி குழுமம் விவசாயிகளுக்கு வேளாண்பொருள் உற்பத்திசெய்ய கடன் உதவி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply