பழைய ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த விதியின் கீழும் விவாதிக்கத் தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "கறுப்புப்பணத்தை அடியோடு ஒழிக்கும் விதமாக, பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு எதிராக, எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, சபாநாயகர் குறிப்பிடும் எந்தவிதியின் கீழும் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறோம். இதற்காக, கூட்டத் தொடரின் மீதியுள்ள 3 நாட்களும் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் வருவார்" என்று கூறினார்.

Leave a Reply