பிரதமர் நரேந்திரமோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வரத்தவறிய அமைச்சர்களின் பட்டியலை கேட்டுள்ளார். பாஜக நாடாளுமன்ற கட்சியின் வாராந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்ற கடமைகளை செய்யத்தவறியவர்களின் பட்டியலை கேட்டுள்ளார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர்களின் கருத்துப்படி அரசியல் எல்லைக்கு அப்பால் செயல்பட வேண்டுமென பிரதமர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தண்ணீர்பஞ்சம் உள்ள தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் தொகுதி அதிகாரிகளுடன் அமர்ந்து மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

“எம்பிக்கள் தங்கள் தொகுதிகளில் தனித்துவமான பணிகளைச் செய்யவேண்டும். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து சமூகபணிகளில் பங்கேற்க வேண்டும்” என்று தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

காசநோய் மற்றும் தொழுநோய் போன்ற நோய் தாக்கங்களை சமாளிக்க மிஷன் போன்று செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த மாத தொடக்கத்தில் கூட பாராளுமன்றத்தை தவிர்த்த எம்.பிகளை பிரதமர் மோடி கண்டித்தார்.

மற்றொரு நாடாளுமன்றக்கட்சி கூட்டத்தில் மூத்த பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் மகன் ஆகாஷ் விஜயவர்கியா போன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் நடத்தைகுறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.

“இத்தகைய நபர்கள் விதி விலக்கு இல்லாமல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். யாருடைய மகன் என்பது முக்கியமல்ல” என்று பிரதமர் கூறினார்

Comments are closed.