நாடு சுதந்திரம் அடைந்த போது, பல்வேறு மாகாணங்களாக பிரிந்திருந்த தேசத்தை ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்கிய பெருமை சர்தார் வல்லபாய் பட்டேலையே சேரும்.

இதன் காரணமாகவே அவர், இந்தியாவின் முதல் “இரும்பு மனிதர்” என அழைக்கப் படுகிறார்.குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவரது நினைவாக, அந்தமாநிலத்தில் சர்தார் சரோவார் அணை அருகே படேலுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலையை, அந்தமாநில பாஜக அரசு அமைத்துள்ளது.

அத்துடன், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை நாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை”யாக பாஜக கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டும் அவரது பிறந்தநாளான இன்று (அக்டோபர் 31), பாஜகவின் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒற்றுமை யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக பாஜக சார்பில் சென்னையிலும் இன்று காலை இந்த யாத்திரை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் பிரபல நடிகையான கௌதமியும் இந்த யாத்திரையில் கலந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியை இவர், கடந்தஆண்டு சந்தித்து பேசினார். இந்த நிலையில், பேரணியில் கௌதமி இன்று பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த கௌதமி, ரஜினி, கமல், சத்யராஜ், ராமராஜன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

Comments are closed.