நாடுமுழுவதும் ரூ.6 ஆயிரம்கோடி மதிப்பில் 250 வேளாண் பொருள்கள் பதப்படுத்தும் மையங்களை அமைக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.


இது குறித்து மத்திய உணவு பதப்படுத்துதல்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல், தில்லியில் செய்தியாளர் களிடம் வியாழக் கிழமை கூறியதாவது:


 விவசாய விளைபொருள்கள் வீணாவதை தடுப்பதற்காக மத்தியஅரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அந்தவகையில், 250 வேளாண் பொருள்கள் பதப்படுத்தும் மையங்களை அரசு அமைக்கவுள்ளது.
 இதற்கான செயல் திட்டங்கள் தயாரிக்கப் பட்டுவிட்டன. உரிய ஒப்புதல்கிடைத்த பிறகு இத்திட்டங்களைச் செயல்படுத்து வதற்கான பணிகள் தொடங்கப்படும்.


 ஒருமையத்துக்கு ரூ.20 கோடி முதலீடு என்ற வீதத்தில் இத்திட்டத்தில் முதலீடுசெய்ய பொதுத்துறை, தனியார்துறை ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படும். குறிப்பிட்ட பழங்கள், காய்கறிகள் விளையும் இடத்துக்கு அருகே இந்தமையங்கள் அமையவுள்ளதால் விவசாயிகள் அதிகளவில் பயன்பெறுவர். விளைபொருள்கள் வீணாவது தடுக்கப்படுவதால் அவர்களின் வருமானமும் இரட்டிப்பாகும்.


 இந்த வேளாண்பொருள்கள் பதப்படுத்தும் மையத்துக்கு அரசுசார்பில் ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும். மொத்தம் ரூ.5 ஆயிரம்கோடி மதிப்பில் இத்திட்டத்தை அரசு செயல் படுத்தவுள்ளது என்றார் ஹர்சிம்ரத் கௌர் பாதல்.

Leave a Reply