மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்ததாக்குதலில் 19 ராணுவவீரர்கள் பரிதாபமாக கொல்லப் பட்டனர். இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லையில் இந்தியராணுவத்தினர் அதிரடியாக நுழைந்து தீவிரவாதிகளின் கூடாரங்களை அழித்தனர். இந்ததாக்குதலில் சுமார் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப் பட்டிருக்கின்றனர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு அனைத்துமக்களும், கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. நாடு என்று வந்து விட்டால் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து விடுகிறார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply