மின்னணு பண பரிவர்த் தனைக்கு மாறுவதால் நாடு பல்வேறு பொருளாதார ஆச்சரியங்களை சந்திக்க உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற, டிஜிட்டல் பண பரிவர்த் தனையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் பேசியவர் இதனைத் தெரிவித்தார். டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வியபாரிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுவழங்கும் அரசின் இருதிட்டங்கள் குறித்து விளக்கிய மோடி, 50 ரூபாய் முதல் 3,000 ரூபாய் 
வரைக்குள்ளாக பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் இத் திட்டங்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார். இதன்மூலம், ஏராளமான ஏழைகள் பலன்பெறுவார்கள் எனவும் அவர்தெரிவித்தார்.

அடுத்த நூறுநாட்களில் ஏராளமானோருக்கு இந்தபரிசு சென்றடையும் என்றும், இதன் மெகாகுலுக்கல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம்தேதி மேற்கொள்ளப்படும் என்றும் நரேந்திர மோடி கூறினார். முன்னதாக, மொபைல் போன்மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான 'BHIM' செயலியை அவர் அறிமுகப்படுத்தினார். 

இந்தசெயலியின் மூலம், கட்டை விரலைக்கொண்டு பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டவர்களுக்கு பிரதமர் பரிசுகளை வழங்கினார். கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்காக, லக்கி கிரஹக்யோஜனா என்ற பரிசுத்திட்டத்தையும், சிறு வியாபாரிகளுக்காக டிஜி தன்வாபர் யோஜனா எனும் பரிசுத்திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply