'குற்றம் மற்றும் குற்றவாளிகள் குறித்த தகவல்களை, நாடுமுழுவதும் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும், பகிர்ந்துகொள்ளும் திட்டப்பணிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, நடைமுறைக்கு வரும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில், மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ்ஆஹிர், கூறியதாவது: நாடுமுழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களை இணைக்கும் வகையில், சி.சி.டி.என்.எஸ்., எனப்படும், 'கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங்நெட்வொர்க் சிஸ்டம்' என்ற தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இதில் உள்ள தகவல்களை, நாடுமுழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பார்க்கமுடியும். இதன் மூலம் குற்றவாளிகள் குறித்தும், குறிப்பிட்ட குற்றம், அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள, 15 ஆயிரம் போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட காவல் உயர திகாரி கள் அலுவலகங்கள் இணைக்கப்பட உள்ளன.


இதுவரை, 12,665 போலீஸ் ஸ்டேஷன்களும், 5,233 காவல் உயரதிகாரிகள் அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 4.43 லட்சம் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, மார்ச் மாதத்துக்குள் இந்த திட்டப்பணிகள் முடிந்து, நடைமுறைக்குவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களை, சி.சி.டி.என்.எஸ்.,சில் இணைப்பதன் மூலம், குற்றம் மற்றும் குற்றவாளிகள் குறித்த அனைத்து தகவல்களும் டிஜிட்டல் மயமாகிறது. 'ஆன்லைன்' மூலமாக புகார் அளிப்பது, வழக்குவிசாரணை விபரம், குற்றப்பத்திரிகை ஆகியவையும் டிஜிட்டல் மயமாகும். குறிப்பிட்ட குற்றம் அல்லது குற்றவாளிகள் குறித்து, மற்ற மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுப்பது, உதவிகோருவது போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.

Leave a Reply