பிரதமர் மோடியின் ஆட்சியின்கீழ் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தர்.

இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது: பிரதமர், நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில், நாடு வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமமே இல்லை என்ற இலக்கை நோக்கிபயணிக்கிறோம். அனைத்து பகுதிகளிலும், வளர்ச்சிக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்., கட்சியின் பிரியங்கா குறித்து விமர்சித்த பா.ஜ., தலைவர் வினய்கத்யார் குறித்து கருத்து தெரிவித்த அவர், ‛பெண்களை தாக்கிபேசுவதையும், கருத்து தெரிவிப்பதையும் யாரும் விரும்ப மாட்டார்கள். அதனை பா.ஜ., என்றும் ஆதரிக்காது' என்று கூறினார்.

Tags:

Leave a Reply