நாட்டிற்கு எதிரான சிந்தனை உடையவர்களுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆதரவு அளிப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
 
உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியவர், டெல்லி  ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்திற்கு சென்ற ராகுல், மாணவர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு பேச்சுரிமை உள்ளதென ராகுல் கூறுகிறார். நாட்டிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவர்களை சந்திக்க சென்ற ராகுலை நினைத்து காங்கிரஸ்கட்சி வெட்கப்பட வேண்டும். பேச்சுரிமை என்ற பெயரில் நாட்டிற்கு எதிராக குரல் எழுப்புவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றார்.

Leave a Reply