நாட்டில் தேசபக்தி குறைந்து வருவதால் சுயநலத்திற்காக மனிதஉரிமைகள் மீறப்படுகின்றன என்று மத்திய புள்ளியியல்துறை அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்தார்.

தேசிய அளவில் மனிதஉரிமைகள் மீறப்படுவது அதிகரித்துள்ளது. இதில் அரசியல்வாதிகள் தங்கள் சுய நலத்திற்காக மனித உரிமைகளை மீறி வருகின்றனர். இதில் அதிகாரிகளும் சளைத்தவர்கள் அல்ல. சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்கவேண்டும். இதற்கு அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். நாட்டில் தேசபக்தி குறைந்து வருவதாலும், சுயநலத்திற்காக மனித உரிமைகள் மீறப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. மனிதஉரிமைகள் எல்லா தனிமனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றார் அவர்.

Leave a Reply