நாட்டில் முதல் முறையாக ‛மகிழ்ச்சித்துறை'யை அறிமுகப்படுத்திய ம.பி., அரசு, அதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

 

மத்தியப் பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பொது மக்கள் நலனை கருத்தில்கொண்டு, ‛மகிழ்ச்சித் துறை' ஒன்றை அம்மாநில அரசு அண்மையில் அறிமுகப் படுத்தியது. ஏழ்மையில் வாடும்மக்களுக்கு தேவையான உதவிகள், தகுதியான நபர்களுக்கு சென்று சேர்வதற்காக இத்துறை உருவாக்கப்பட்டது.

இத்துறையின் மூலம் உதவிசெய்ய விரும்புபவர்கள் இத்துறையை தொடர்புகொண்டு தகவல் அளித்தால் இத்துறையினர் அந்த உதவி தேவைப்படும் தகுதியான நபருக்கு அந்தஉதவி கிடைக்க வழி செய்வர். இந்த சேவையை அரசு இலவசமாக செய்துவருகிறது. இந்நிலையில் அதனை மாநிலம்முழுவதும் உள்ள 51 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த ம.பி., அரசு திட்டமிட்டுள்ளது.

 

இது குறித்து ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்ததாவது: உதவிகள் தேவைப் படுவோருக்கு பயன் கிடைக்குமாறு ‛மகிழ்ச்சிதுறை' வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் மகிழ்ச்சியும் உறுதிசெய்யப்படும். மாநிலம் முழுவதும் இதனை விரிவுபடுத்த திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற இது வரை 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply