குடியுரிமை திருத்தச்சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டுமக்களை தவறாக வழிநடத்துகின்றன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில்,

“எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டுமக்களை தவறாக வழிநடத்துகின்றன. சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடியுரிமை ஏதேனும் பறிக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை என்பதை நான்மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த மசோதாவில் அதற்கான வழிவகை ஏதும் இல்லை.

இது நேரு – லியாகத் ஒப்பந்தத்தின் ஒருஅங்கம் என்பதை காங்கிரஸுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வாக்கு வங்கி அரசியலுக்காக இது 70 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. எங்களுடைய அரசு இதைநிறைவேற்றி லட்சக்கணக்கான, கோடிக்கணக்கானவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது” என்றார்.

Comments are closed.