நாட்டு மக்கள் அனைவருக்கும் மகா சிவ ராத்திரி தின வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாடுமுழுவதும் இன்று மகா சிவ ராத்திரி விழா இந்து மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  அனைத்து சிவாலயங்களிலும் இன்று மகாசிவராத்திரிக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் மகா சிவராத்திரி தின வாழ்த்துகள் என்று பதிவு செய்துள்ளார்.

மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முந்தையதினம் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. சிவனை வேண்டி ஆண்டுதோறும் இந்த நாளில் இந்துக்கள் சிவாலயங்களில் வழிபாடு நடத்தி, புண்ணிய நதிகளில் நீராடுவது வழக்கம்.

Leave a Reply