எதற்காகவும் யாரிடமும் அடிபணிய நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத முகாம்களை தாக்கி முற்றிலுமாக அழித்த விமானப் படை வீர்ர்களுக்கு தலை வணங்குகிறேன் என தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில் முன்னாள் ராணுவவீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர  மோடி பேசி வருகிறார்.

அவரது பேச்சில், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விமானப் படை வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு படையினரே காரணம். நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று நாட்டுமக்களிடம் உறுதியாக கூறுகிறேன்.

நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டேன். நான் எதற்காகவும் யாரிடமும் அடிபணிய நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன். நாட்டிற்கு எதிரான எந்த நடவடிக்கையும், செயலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

நாட்டைவிட முக்கியமானது எதுவும் இல்லை. நாட்டை யாரும் மிரட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஆவேசமாக பேசினார் மோடி.

Leave a Reply