சுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : "ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ???" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர்

இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் செத்துவிட்டது என்பதற்கு இது பெரும் அடையாளம், நாத்திகத்தின் ஆயுள் அவ்வளவே

கலைஞருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது ஆனால் சமத்தாக மறைத்தார், திருவாரூர் கோவிலின் மேல் அவருக்கு அவ்வளவு அபிமானம் இருந்தது

வேட்பாளர் பட்டியல் தயாரானதும் தன் தாயார் சமாதியில் வைத்து ஆசிபெறுகின்றேன் என அவர் செய்து அச்சீட்டை ரகசியமாக திருவாரூர் கோவிலுக்கு அனுப்புகின்றார் என்றெல்லாம் செய்திகள் வந்தன‌

ஆனால் தாயார் சமாதிக்கு அவர் பட்டியலை அனுப்பியது உண்மை, ஓடாத திருவாரூர் தேரை அவர் ஓட வைத்ததும் உண்மை

வள்ளுவர் கோட்டம் முதல் புதிய சட்டமன்ற கட்டம் வரை திருவாரூர் தேரை அவர் நிறுத்தியதும் வரலாறு

ஆனால் மிக சமர்த்தாக செய்தார், ஸ்டாலின் அதனை பகிரங்கமாக செய்கின்றார்

தில்லை கோவிலையும், காளையார் கோவிலையும் பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் வரும் என சொன்ன திமுகவின் இன்றைய தலைவர் அக்கோவிலுக்கு சென்றிருப்பது காலமாற்றம்

ஆண்டவன் முன் மனிதன் ஆட்டம் செல்லாது என சொல்லவைக்கும் தத்துவம்

மாலிக்காபூர் காலமுதல் அந்த ஸ்ரீரங்க ஆலயத்தை இடிப்பேன் என‌ பெரும் அழிச்சாட்டியம் செய்தவர்களை எல்லாம் அமைதி புன்னகையுடன் பார்த்திருந்த ஸ்ரீரங்கநாதர் இப்பொழுது முக ஸ்டாலினையும் அதே அமைதி புன்னகையுடன் பார்க்கின்றார்.

திமுகவிற்கும் இந்துமதத்திற்கும் நடந்ததாக சொல்லபட்ட போரில் இப்பொழுது இந்துமதமே வென்றிருக்கின்றது

புத்தர் காலம் முதல், அலெக்ஸாண்டர், இஸ்லாமியர் பிரிட்டானியர் வரை மாபெரும் பேரரசுகளை எதிர்த்து தன்னை தற்காத்துகொண்ட இந்துமதன் தன் இந்த நூற்றாண்டின் ஆபத்தான திமுகவினையும் தன் உள்ளே இழுத்து கொண்டது

பகுத்தறிவு முதல் ஏராளமான தத்துவ‌ங்கள் திருவரங்கத்தான் சந்நிதியில் புகையாக எரிந்துகொண்டிருக்கின்றது.

பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைபெற்றுவிட்ட மாபெரும் ஞான‌ தத்துவ மதமான இந்துமதம் வெறும் 80 ஆண்டுகாலமே ஆடிய திமுகவினை வெற்றிகொள்வது ஒன்றும் ஆச்சரியமல்ல..

திருவரங்கம் ஆலயத்தின் எதிரே இருக்கும் பெரியார் சிலை இப்பொழுது என்ன நினைக்குமென தெரியவில்ல்லை, ஆனால் இனி அந்த சிலை அங்கு இருக்கவும் அவசியமென்ன? என நாம் கேட்டுவிட கூடாது.

நன்றி ரத்தினம் முருகேசன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.