ராகுல் குடும்பத்தினரை போன்று நான் தங்ககரண்டியுடன் (கோல்டன் ஸ்பூன்) பிறக்கவில்லை. நான் உங்களில் ஒருவன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் நகவுராபகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்பேசுகையில், எனது பெற்றொர், தாத்தா- பாட்டியும் ஆட்சியாளர்கள் இல்லை. பா.ஜ., அரசு சாமானிய மக்களுக்கானது. நாங்கள் 130 கோடி மக்கள் வளம்பெறவேண்டும் என விரும்புகிறோம்.

அரசை எதிர்க்க வேறு வழியில்லாதவர்கள் ஏழைகளையும், விவசாயிகளையும் வைத்து அரசியல் செய்கிறார்கள். நான் எனது குடும்பத்திற்காக ஓட்டுகேட்கவில்லை. காங்., பரம்பரை அரசியலை உருவாக்க நினைக்கிறது. நீங்கள் உங்களின் ஓட்டின் வலிமையை உணரவேண்டும். உங்களின் ஓட்டு ராஜஸ்தானை உருவாக்கவும் முடியும், சிதைக்கவும் முடியும். ஏழைகளுக்கு 50 லட்சம் சமையல் இணைப்பு கொடுத்தது பா.ஜ., அரசு. நகவூரில் 16,000 பேருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 2022 க்குள் அனைவருக்கும் வீடுவழங்கப்படும்.

அனைவரும் வளம் பெறவேண்டும் என்பதே பா.ஜ.க , அரசின் ஒரேமந்திரம். நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆட்சிசெய்தவர்கள் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. மக்களின் வலியை புரிந்துகொள்ளவும் இல்லை. நமது பேரக் குழந்தைகளின் நல்வாழ்விற்காகவும், மக்களின் கனவுகள் நினைவாக வேண்டும் என்பதற்காகவுமே நாங்கள் ஓட்டுக் கேட்கிறோம். நான் உங்களில் ஒருவன். உங்களைப் போன்ற வாழ்க்கையை தான் நானும் வாழ்கிறேன் என்றார்.

Leave a Reply