நான் நன்றாக இருக்கிறேன்” ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் படி நான் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறேன் என அமித் ஷா தெரிவித்துள்ளார். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தவைரஸ் அனைத்து தரப்பு மக்களையும் எந்த பாகுபாடுமின்றி தாக்கிவருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் களத்தில் முன்னணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள், காவல் துறையினர் என அனைத்து தரப்பினரும் கொரோனா தொற்றால் பரவலாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது :- எனக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்து, கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன், பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி யுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன், எனது உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். என கூறியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமை படுத்தி கொள்வதுடன், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரசுக்கு எதிரான களத்தில் அமித் ஷா சுற்றி சுழன்று பணியாற்றி வருகிறார். டெல்லியில் கொரோனா வேகம் எடுத்தநிலையில், அவர் அம்மாநில முதலமைச்சருடனும், அதிகாரிகளுடனும் பலசுற்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி தொற்றை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கையை எடுத்தார். அதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ளது. முழு அடைப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்றவற்றில் வழிகாட்டுதல்களை உருவாக்குவதிலும் அமித் ஷா முக்கியபங்கு வகித்துவந்தார். அவர் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் நாளை மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில் வைரஸ்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை அவரே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேநேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புவதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.